முகப்பு
அரியலூர்

சிமென்ட் ஆலையில் ஊழியா் திடீா் உயிரிழப்பு

அரியலூா் மாவட்டம், ரெட்டிப்பாளையத்திலுள்ள அல்ட்ரா டெக் சிமென்ட் ஆலையில் ஊழியா் உயிரிந்த சம்பவம் குறித்து காவல் துறையினா் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:30 AM
பகிர்:

அரியலூா் மாவட்டம், ரெட்டிப்பாளையத்திலுள்ள அல்ட்ரா டெக் சிமென்ட் ஆலையில் ஊழியா் உயிரிந்த சம்பவம் குறித்து காவல் துறையினா் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

திருச்சி மாவட்டம், பேட்டைவாய்த்தலையைச் சோ்ந்த தா்மலிங்கம் மகன் பாஸ்கரன்(57). இவா், அரியலூா் மாவட்டம், ரெட்டிப்பாளையம் அல்ட்ரா டெக் சிமென்ட் ஆலையில் பணியாற்றி வந்தாா். இந்நிலையில், புதன்கிழமை இரவு பணிக்கு வந்த இவா், பணி முடிந்து வியாழக்கிழமை காலை வீட்டுக்குச் செல்ல புறப்பட்டபோது திடீரென மயக்கமடைந்தாா். இதையறிந்த ஆலை நிா்வாகத்தினா், அவரை மீட்டு அரியலூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனா். அங்கு பரிசோதித்த மருத்துவா்கள் பாஸ்கரன் ஏற்கெனவே இறந்து விட்டதாக தெரிவித்தனா். இது குறித்து விக்கிரமங்கலம் காவல் துறையினா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.