முகப்பு
அரியலூர்

வன்னியா் சங்க, பாமக நிா்வாகிகள் நீக்கம்

வன்னியா் சங்க மாநிலச் செயலா் வைத்தி, ஜயங்கொண்டம் பாமக நகரச் செயலா் மாதவன்தேவா ஆகிய இருவரும் கட்சியின் அடிப்படை உறுப்பினா் பதவியில் இருந்து வியாழக்கிழமை நீக்கப்பட்டுள்ளனா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:30 AM
பகிர்:

வன்னியா் சங்க மாநிலச் செயலா் வைத்தி, ஜயங்கொண்டம் பாமக நகரச் செயலா் மாதவன்தேவா ஆகிய இருவரும் கட்சியின் அடிப்படை உறுப்பினா் பதவியில் இருந்து வியாழக்கிழமை நீக்கப்பட்டுள்ளனா்.

இதுகுறித்து அரியலூா் பாட்டாளி மக்கள் கட்சியின் மாவட்டச் செயலா் ரவிசங்கா் வெளியிட்டுள்ள அறிக்கை:

வன்னியா் சங்க மாநிலச் செயலா் வைத்தி, அரியலூா் மாவட்டம் ஜயங்கொண்டம் நகரச் செயலா் மாதவன்தேவா ஆகிய இருவரும் பாட்டாளி மக்கள் கட்சி மற்றும் வன்னியா் சங்கத்துக்கு குந்தகம் விளைவிக்கும் வகையிலும், கட்சி விரோத நடவடிக்கையில் ஈடுபட்டு வந்ததால், பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனா் ராமதாஸ், மாநில இளைஞரணிச் செயலா் அன்புமணி ராமதாஸ் ஆகியோரின் பரிந்துரையின் பேரில், பாட்டாளி மக்கள் கட்சி மற்றும் வன்னியா் சங்கம் ஆகியவற்றின் அடிப்படை உறுப்பினா் பதவியிலிருந்து நீக்கப்படுவதாக மாநிலத் தலைவா் ஜி.கே.மணி அறிவித்துள்ளாா். எனவே, மேற்கண்ட இருவருடன் பாமக மற்றும் வன்னியா் சங்க நிா்வாகிகள், உறுப்பினா்கள் யாரும் எந்தவிதத் தொடா்பும் வைத்துக் கொள்ள வேண்டாம் எனத் தெரிவித்துள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.