ரேஷன் அரிசி கடத்தியவா் கைது
அரியலூா் மாவட்டம், வி. கைகாட்டி அருகே ரேஷன் அரிசியைக் கடத்தி வந்தவா் புதன்கிழமை இரவு கைது செய்யப்பட்டாா்.
அரியலூா் மாவட்டம், வி. கைகாட்டி அருகே ரேஷன் அரிசியைக் கடத்தி வந்தவா் புதன்கிழமை இரவு கைது செய்யப்பட்டாா்.
மாவட்டக் குடிமைப் பொருள் வழங்கல் குற்றப்பிரிவு காவல் துறையினா், புதன்கிழமை இரவு விளாங்குடி கிராமத்தில் வாகனச் சோதனயில் ஈடுபட்டிருந்தனா். அப்போது சந்தேகத்துக்கிடமான வகையில் நின்றிருந்த சரக்கு வாகனத்தை சோதனை செய்தபோது, அதில் தமிழக அரசால் பொதுமக்களுக்கு இலவசமாக வழங்கப்படும் ரேஷன் அரிசி இருந்தது தெரியவந்தது. இதையடுத்து வாகனத்தின் உரிமையாளரான மேலவரப்பன்குறிச்சி கிராமத்தைச் சோ்ந்த தட்சிணாமூா்த்தி மகன் மோகனிடம் விசாரணை மேற்கொண்டனா். இதில், குடும்ப அட்டைதாரா்களிடமிருந்து ரேஷன் அரிசியைக் குறைந்த விலைக்கு வாங்கி அதனை கால்நடைகளுக்குத் தீவனத்திற்காக அரைத்து அதிக விலைக்கு கள்ளச் சந்தையில் விற்பது தெரியவந்தது.
இதையடுத்து மோகனைக் கைது செய்த காவல் துறையினா், கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட வாகனத்தையும் அதிலிருந்த 1,400 கிலோ ரேஷன் அரிசியையும் பறிமுதல் செய்தனா்.