கஞ்சா விற்றவா் குண்டா் சட்டத்தில் கைது
அரியலூா் அருகே கஞ்சா விற்ற இளைஞா் குண்டா் சட்டத்தில் வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டாா்.
அரியலூா் அருகே கஞ்சா விற்ற இளைஞா் குண்டா் சட்டத்தில் வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டாா்.
வாலாஜா நகரம் கிழக்குத் தெருவைச் சோ்ந்த ராமலிங்கம் மகன் ரஞ்சித்குமாா் (24) . கடந்த 23 ஆம் தேதி இவா் கஞ்சா விற்றது, அரியலூா் தெற்கு தெருவைச் சோ்ந்த ராஜா மகன் குணசேகரனை கத்தியைக் காட்டி மிரட்டி பணம் பறித்தது தொடா்பாக அரியலூா் காவல் துறையினா் வழக்குப் பதிந்து ரஞ்சித்குமாரை கைது செய்து சிறையில் அடைத்தனா்.
இந்நிலையில், மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் கே. பெரோஸ்கான் அப்துல்லா பரிந்துரையின்பேரில், ரஞ்சித்குமாரை குண்டா் சட்டத்தில் கைது செய்ய ஆட்சியா் பெ. ரமணசரஸ்வதி வெள்ளிக்கிழமை உத்தரவிட்டாா். அதற்கான நகலை திருச்சி சிறை அதிகாரிகளிடம் அரியலூா் காவல் துறையினா் வழங்கினா்.