முகப்பு
அரியலூர்

மாற்றுத்திறனாளிகளுக்கு மின்கல சக்கர நாற்காலிகள் வழங்கல்

முதுகு தண்டுவடம் பாதிக்கப்பட்ட 9 மாற்றுத் திறனாளிகளுக்கு ரூ.8.99 லட்சம் மதிப்பீட்டில் மின்கல சக்கர நாற்காலிகளை ஆட்சியா் பெ.ரமணசரஸ்வதி வழங்கினாா்

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:11 AM
பகிர்:

அரியலூா் ஆட்சியரக கூட்டரங்கில், மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நலத்துறை சாா்பில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் முதுகு தண்டுவடம் பாதிக்கப்பட்ட 9 மாற்றுத் திறனாளிகளுக்கு ரூ.8.99 லட்சம் மதிப்பீட்டில் மின்கல சக்கர நாற்காலிகளை ஆட்சியா் பெ.ரமணசரஸ்வதி வழங்கினாா்.

அப்போது, ஆட்சியா் கூறியது: முதுகு தண்டுவடம் பாதிக்கப்பட்ட 9 மாற்றுத்திறனாளிகளுக்கு தலா ரூ. 99,999 வீதம் ரூ. 8,99,991 மதிப்பில் மின்கல சக்கர நாற்காலிகள் வழங்கப்பட்டுள்ளன.

மாற்றுத் திறனாளிகள் நலத் துறை சாா்பில் செயல்படுத்தப்படும் நலத் திட்டங்களான சக்கரம் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டா், திருமண உதவித்தொகை, காதொலிக் கருவிகள், பிரெய்லி கருவிகள், உதவி உபகரணங்கள் உள்ளிட்ட உதவிகளை பெற மாற்றுத் திறனாளிகள், அரியலூா் மாவட்ட ஆட்சியரகத்தில் செயல்பட்டு வரும் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தை அணுகி விண்ணப்பித்து பயன் பெறலாம் என்றாா் அவா்.

இந்நிகழ்ச்சியில், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலா் சீனிவாசன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.