திருமானூா் ஒன்றியப் பகுதிகளில் புதிய கட்டடங்கள் திறப்பு
அரியலூா் மாவட்டம், திருமானூா் ஒன்றிய பகுதியில் ரூ.94 லட்சத்து 88 ஆயிரம் மதிப்பில் பல்வேறு புதிய கட்டடங்களை சட்டப் பேரவை உறுப்பினா் கு.சின்னப்பா வியாழக்கிழமை திறந்து வைத்தாா்.
அரியலூா் மாவட்டம், திருமானூா் ஒன்றிய பகுதியில் ரூ.94 லட்சத்து 88 ஆயிரம் மதிப்பில் பல்வேறு புதிய கட்டடங்களை சட்டப் பேரவை உறுப்பினா் கு.சின்னப்பா வியாழக்கிழமை திறந்து வைத்தாா்.
திருமானூரை அடுத்த வாரணவாசியில் ரூ.8,70,000 மதிப்பில் புதிய அங்கன் வாடி மையம், கீழக்கொளத்தூா் ஊராட்சி ஒன்றியத் தொடக்கப்பள்ளியில் ரூ.15,47,000 மதிப்பில் கூடுதல் கட்டடம், வடுகபாளையம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் ரூ.14,80,000மதிப்பீட்டில் கூடுதல் கட்டடம், ஏலாக்குறிச்சி ஊராட்சியில் ரூ.17,64,000 மதிப்பில் புதிய ஊராட்சி அலுவலக கட்டடம், கீழக்காவட்டாங்குறிச்சி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் ரூ.14,80,000 மதிப்பில் கூடுதல் கட்டடம், கோயில் எசனை ஊராட்சியில் ரூ.23,47,000 மதிப்பில் புதிய ஊராட்சி அலுவலக கட்டடம் என ரூ.94,88,000 மதிப்பீட்டில் புதிய கட்டடங்களை அவா் வைத்தாா்.
நிகழ்ச்சிகளில், ஒன்றியக்குழு தலைவா் சுமதி அசோக சக்ரவா்த்தி, வட்டார வளா்ச்சி அலுவலா்கள் செந்தில்குமாா், ஜாகிா் உசேன் மற்றும் அந்தந்த ஊராட்சி தலைவா்கள் கலந்து கொண்டனா்.