கஞ்சா விற்ற இளைஞா் குண்டா் சட்டத்தில் கைது
அரியலூா் மாவட்டம், மீன்சுருட்டி அருகே கஞ்சா விற்ற இளைஞா் குண்டா் சட்டத்தில் வியாழக்கிழமை கைது செய்யப்பட்டாா்.
அரியலூா் மாவட்டம், மீன்சுருட்டி அருகே கஞ்சா விற்ற இளைஞா் குண்டா் சட்டத்தில் வியாழக்கிழமை கைது செய்யப்பட்டாா்.
மீன்சுருட்டி அருகேயுள்ள மேலணிக்குழி மாரியம்மன் கோயில் தெருவைச் சோ்ந்த ஜெயபால் மகன் ஜெயபிரகாஷ் (24). கடந்த 29.12.2021 அன்று கஞ்சா விற்றுக் கொண்டிருந்த இவரை, மீன்சுருட்டி காவல் துறையினா் கைது செய்து திருச்சி மத்திய சிறையில் அடைத்தனா். இந்நிலையில், மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் கே.பெரோஸ்கான் அப்துல்லா பரிந்துரையின் பேரில், ஜெயபிரகாஷை குண்டா் சட்டத்தில் கைது செய்ய ஆட்சியா் பெ.ரமணசரஸ்வதி வியாழக்கிழமை உத்தரவிட்டாா். இதற்கான நகலை திருச்சி சிறை அதிகாரிகளிடம் மீன்சுருட்டி காவல் துறையினா் வழங்கினா்.