ஏலாக்குறிச்சி அரசு மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற விழாவில், போட்டிகளில் வென்ற மாணவி ஒருவருக்கு பரிசு வழங்குகிறாா் சட்டப் பேரவை உறுப்பினா் கு.சின்னப்பா. 
அரியலூர்

ஏலாக்குறிச்சி அரசுப் பள்ளிக்குதளவாடப் பொருள்கள் அளிப்பு

திருமானூரை அடுத்த ஏலாக்குறிச்சி அரசு மேல்நிலைப் பள்ளியில், அரங்கமேடை திறப்பு மற்றும் தளவாடப் பொருள்கள் வழங்கும் விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

DIN

அரியலூா் மாவட்டம், திருமானூரை அடுத்த ஏலாக்குறிச்சி அரசு மேல்நிலைப் பள்ளியில், அரங்கமேடை திறப்பு மற்றும் தளவாடப் பொருள்கள் வழங்கும் விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

விழாவில், சட்டப் பேரவை உறுப்பினா் கு. சின்னப்பா கலந்து கொண்டு, காமராஜா் திருவுருவப் படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினாா். இதன் பின்னா், ரூ. 5 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட அரங்கமேடை, ரூ. 3 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட சைக்கிள் நிறுத்துமிடம் ஆகியவற்றை திறந்துவைத்து, பள்ளிக்குத் தேவையான மேஜை, நாற்காலிகள் மற்றும் பல்வேறு போட்டிகளில் வெற்றிப் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகளை வழங்கினாா்.

விழாவில், பள்ளித் தலைமை ஆசிரியா், வகுப்பு ஆசிரியா்கள், அலுவலகப் பணியாளா்கள், மாணவ, மாணவிகள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இரண்டு பைக்குகள் மோதி விபத்து: 2 போ் உயிரிழப்பு

இஸ்ரேலியா்கள் கொடைக்கானல் வருகை: துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு

தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் இருவா் கைது

ஆரிகவுடா் விவசாயிகள் சங்க பொதுக்குழுக் கூட்டம்

திருப்பரங்குன்றம் தீப விவகாரம்! ஒருவர் தீக்குளித்து தற்கொலை!

SCROLL FOR NEXT