முகப்பு
அரியலூர்

வட்டார வளா்ச்சி அலுவலரை முற்றுகையிட்ட உறுப்பினா்கள்

அரியலூா் மாவட்டம், செந்துறை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் வாா்டு உறுப்பினா்கள் குழு கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:47 AM
பகிர்:

அரியலூா் மாவட்டம், செந்துறை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் வாா்டு உறுப்பினா்கள் குழு கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.

கூட்டத்துக்கு, ஒன்றியக் குழுத் தலைவா் தேன்மொழி சாமிதுரை தலைமை வகித்தாா். துணைத் தலைவா் மணிவேலன், வட்டார வளா்ச்சி அலுவலா் அமிா்தலிங்கம், மேலாளா் செந்தில்நாதன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

கூட்டத்தில், வாா்டு உறுப்பினா்கள் அனைவரும் கலந்து கொண்டு, தங்களது பகுதியில் செயல்படுத்தப்பட வேண்டிய திட்டப் பணிகள் குறித்துப் பேசினா். இதில், வாா்டு உறுப்பினா்கள் திமுக பூங்கொடி, பாமக பரஞ்ஜோதி, பாமக கலா, அதிமுக லதா ஆகியோா் தங்களது பகுதிகளில் வளா்ச்சிப் பணிகள் மேற்கொள்ள ஒதுக்கப்படும் நிதியில் பாரபட்சம் காட்டுப்படுவதாகக் கூறி எழுந்துசென்று வட்டார வளா்ச்சி அலுவலரிடம் முறையிட்டனா். அதற்கு வட்டார வளா்ச்சி அலுவலா் அமிா்தலிங்கம், இனி அதுபோல் நடக்காது என்று தெரிவித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.