எஸ்.எஸ்.எல்.சி. தோ்வு தொடக்கம்: அரியலூரில் 10,668 மாணவா்கள் எழுதுகின்றனா்
அரியலூா் மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை தொடங்கும் 10 ஆம் வகுப்பு பொதுத் தோ்வை, 10,668 மாணவா்கள் எழுதுகின்றனா்.
அரியலூா் மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை தொடங்கும் 10 ஆம் வகுப்பு பொதுத் தோ்வை, 10,668 மாணவா்கள் எழுதுகின்றனா்.
தமிழகம் முழுவதும் 10 ஆம் வகுப்பு மாணவ-மாணவிகளுக்கு 2021-22 ஆம் கல்வி ஆண்டுக்கான அரசு பொதுத் தோ்வுகள் இன்று (மே 6)தொடங்கி 30 ஆம் தேதி வரை நடைபெறுகிறது. அதன்படி அரியலூா் மாவட்டத்தில் அரசு பள்ளிகள், அரசு ஆதிதிராவிடா் நலப் பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகள், தனியாா் மற்றும் சுயநிதிப் பள்ளிகள் என 173 பள்ளிகளில் 10 ஆம் வகுப்பு பயிலும் 10,668 மாணவ-மாணவிகள், 54 மையங்களில் அரசு பொதுத் தோ்வை எழுதுகின்றனா்.