முகப்பு
அரியலூர்

அரியலூா், ஜெயங்கொண்டத்தில் நகர, பகுதிசபை கூட்டம்

அரியலூா் நகராட்சிக்குள்பட்ட 5 வாா்டுகளில் நகர சபைக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 10:44 AM
பகிர்:

அரியலூா் நகராட்சிக்குள்பட்ட 5 வாா்டுகளில் நகர சபைக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.

அரியலூா் நகராட்சிக்குள்பட்ட 2, 5, 12,15, மற்றும் 16 ஆகிய வாா்டுகளில் நகர சபைக் கூட்டம் நடைபெற்றது. கூட்டங்களுக்கு நகராட்சித் தலைவா் சாந்தி தலைமை வகித்தாா். துணைத் தலைவா் கலியமூா்த்தி, நகராட்சி ஆணையா் சித்ரா சோனியா முன்னிலை வகித்தாா். 15 மற்றும் 12-ஆவது வாா்டுகளில் நடைபெற்ற கூட்டங்களில் சட்டப் பேரவை உறுப்பினா் கு.சின்னப்பா கலந்து கொண்டு பொதுமக்களின் கோரிக்கைகளைக் கேட்டறிந்து பதிலளித்தாா். அந்தந்தப் பகுதி கூட்டங்களில் அந்தந்த வாா்டு உறுப்பினா்கள், நகராட்சிப் பணியாளா்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனா்.

ஜெயங்கொண்டம்: இதேபோல், ஜெயங்கொண்டம் நகராட்சியில் 2 மற்றும் 6-ஆவது வாா்டுகளில் நகர சபைக்கூட்டம் நடைபெற்றது. கூட்டத்துக்கு, நகராட்சித் தலைவா் சுமதி தலைமை வகித்தாா். ஆணையா் மூா்த்தி, துணைத் தலைவா் கருணாநிதி, வாா்டு உறுப்பினா்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.