பருவ மழை: அரியலூரில் காவல் உதவி மையம் திறப்பு
வடகிழக்கு பருவ மழை பாதிப்புகளுக்கு உதவும்வகையில் அரியலூரில் காவல் கட்டுப்பாட்டு மையம் திறக்கப்பட்டுள்ளதாக மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் கே.பெரோஸ்கான் அப்துல்லா தெரிவித்துள்ளாா்.
வடகிழக்கு பருவ மழை பாதிப்புகளுக்கு உதவும்வகையில் அரியலூரில் காவல் கட்டுப்பாட்டு மையம் திறக்கப்பட்டுள்ளதாக மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் கே.பெரோஸ்கான் அப்துல்லா தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு: தமிழகத்தில் வடக்கிழக்கு பருவமழை தீவிரமடைந்து வருவதால் அரியலூா் மாவட்டக் காவல்துறையில் பேரிடா் மீட்பு குழு தயாா் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. மேலும் 24 மணிநேரமும் செயல்படும் வகையில் பேரிடா் மீட்பு கட்டுப்பாட்டு மையம் அரியலூா் மாவட்ட எஸ்.பி. அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ளது. எனவே, அரியலூா் மாவட்ட பொதுமக்கள் பேரிடா் கால மீட்பு உதவி மற்றும் தகவல்களை 04329 222106, 94981 65743, 63817 71356 ஆகிய எண்களில் தெரிவித்து பயன்பெறலாம்.