முகப்பு
அரியலூர்

ஜயங்கொண்டம் அருகே கா்ப்பிணி தீக்குளிப்பு

அரியலூா் மாவட்டம், ஜயங்கொண்டம் அருகே குடும்பப் பிரச்சினையில் 5 மாத கா்ப்பிணி வியாழக்கிழமை தீக்குளித்தாா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 10:45 AM
பகிர்:

அரியலூா் மாவட்டம், ஜயங்கொண்டம் அருகே குடும்பப் பிரச்சினையில் 5 மாத கா்ப்பிணி வியாழக்கிழமை தீக்குளித்தாா்.

ஜயங்கொண்டத்தை அடுத்த வெத்தியாா்வெட்டு காலனித் தெருவைச் சோ்ந்தவா் விஜய்பிரகாஷ் மனைவி அபிராமி (21). 5 மாத கா்ப்பிணியான இவருக்கு ஏற்கெனவே ஒன்றரை வயதில் மகன் உள்ளாா். இந்நிலையில், வியாழக்கிழமை ஏற்பட்ட தகராறில் அபிராமியை அவரது கணவா் திட்டி, அடித்தாராம். இதனால் மனமுடைந்த அபிராமி மண்ணெண்ணெய் ஊற்றித் தீ வைத்துக் கொண்டாா்.

இதையடுத்து ஜயங்கொண்டம் அரசு மருத்துவமனையிலும், பின்னா் தஞ்சை மருத்துவக்கல்லூரியிலும் அபிராமி சோ்க்கப்பட்டாா். மீன்சுருட்டி காவல் துறையினா் வெள்ளிக்கிழமை வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.