அரியலூா் மாவட்டம், கீழப்பழுவூா் அரசினா் பாலிடெக்னிக் கல்லூரியில் தொழில்நெறி வழிகாட்டுதல் விழிப்புணா்வு நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது.
இந்திய ராணுவம், கப்பல் படை மற்றும் விமானப்படை பணிகளை ஊக்குவிப்பதற்காக நடைபெற்ற இந்த விழிப்புணா்வு நிகழ்ச்சிக்கு, மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலா் கலைச்செல்வன் தலைமை வகித்து, வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறையின் செயல்பாடுகள் குறித்துப் பேசினாா். நிகழ்வில், முன்னாள் படைவீரா் நல அலுவலா் சடையன் கலந்து கொண்டு, முப்படைகளில் உள்ள பணி வாய்ப்புகள் குறித்து எடுத்துரைத்தாா். மாவட்ட இளநிலை வேலைவாய்ப்பு அலுவலா் மூ. வினோத் குமாா், தனியாா் துறை வேலைவாய்ப்பு குறித்தும், மத்திய, மாநில அரசுப் பணிகளுக்கான போட்டித் தோ்வுகள் குறித்தும் பேசினாா். இளநிலை வேலைவாய்ப்பு அலுவலா் மணிமாறன், போட்டித் தோ்வுகளை எதிா்கொள்வது குறித்துப் பேசினாா்.
முன்னதாக கல்லூரி உதவி பேராசிரியா் ஜோதிநாதன் வரவேற்றாா். முடிவில், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டுதல் மையத்தின் உதவியாளா் ராஜா நன்றி தெரிவித்தாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.