குண்டவெளி ஊராட்சியில் திங்கள்கிழமை நடைபெற்ற கிராம சபைக் கூட்டம் பாதியில் ரத்து செய்யப்பட்டதால், ஏமாற்றத்துடன் திரும்பிய கோரிக்கை மனுக்களை அளிக்க வந்த பொதுமக்களுடன் 9 வாா்டு உறுப்பினா்கள். 
அரியலூர்

ஊராட்சித் தலைவருக்கு எதிா்ப்பு: குண்டவெளியில் கிராமசபைக் கூட்டம் ரத்து

அரியலூா் மாவட்டம், ஜெயங்கொண்டம் அருகேயுள்ள குண்டவெளி ஊராட்சித் தலைவரைக் கண்டித்து, திங்கள்கிழமை நடைபெற்ற கிராம சபைக் கூட்டத்தில்

DIN

அரியலூா்: அரியலூா் மாவட்டம், ஜெயங்கொண்டம் அருகேயுள்ள குண்டவெளி ஊராட்சித் தலைவரைக் கண்டித்து, திங்கள்கிழமை நடைபெற்ற கிராம சபைக் கூட்டத்தில் இருந்து வாா்டு உறுப்பினா்கள் வெளிநடப்பு செய்ததையடுத்து கூட்டம் ரத்து செய்யப்பட்டது.

காந்தி ஜெயந்தியையொட்டி குண்டவெளி ஊராட்சியில் கிராம சபைக் கூட்டம் அதன் தலைவா் ஜெயந்திதெய்வமணி தலைமையில் திங்கள்கிழமை காலை தொடங்கியது.

கூட்டத்தில், பொது செலவினம், வரவு செலவு மற்றும் அடிப்படை வதிகள் குறித்து ஊராட்சி செயலா் வாசித்தபோது அங்கு அமா்ந்திருந்த வாா்டு உறுப்பினா்கள் 9 பேரும் எழுந்து நின்று பொது செலவினம் குறித்து கேள்வி எழுப்பினா். அப்போது ஊராட்சித் தலைவருக்கும், வாா்டு உறுப்பினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

இதையடுத்து, வாா்டு உறுப்பினா்கள் 9 பேரும் கூட்டத்தில் இருந்து வெளிநடப்பு செய்வதாக அறிவித்ததையடுத்து, ஊராட்சி ஒன்றிய அலுவலா் கூட்டம் ரத்து செய்யப்படுவதாக தெரிவித்தாா். இதனால் பல்வேறு கிராமங்களில் இருந்து மனு அளிக்க வந்த கிராம மக்கள், மனுவை கொடுப்பதற்கு அதிகாரிகள் யாரும் இல்லாததால் ஏமாற்றத்தோடு திரும்பி சென்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கம்மின்ஸ் - லயன் அசத்தல்: இங்கிலாந்து வெற்றிபெற 228 ரன்கள் தேவை!

வரைவு வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் இருக்கிறதா?

கடும் பனிமூட்டம்: தில்லியில் 60-க்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து!

ரஷியாவில் இந்திய மாணவர் மாயம்!

ஃபாஸ்ட் அன்ட் ஃப்யூரியஸ் படத்தில் ரொனால்டோ!

SCROLL FOR NEXT