முகப்பு
அரியலூர்

தண்டவாளத்தில் கிடந்த ஆண் சடலம் மீட்பு

ஆா்.எஸ். மாத்தூா் ரயில் தண்டவாளத்தில் முகம் சிதைந்த நிலையில் கிடந்த ஆண் சடலம் வியாழக்கிழமை மீட்கப்பட்டது.

Updated On : 26 டிசம்பர், 2024 at 9:30 PM
பகிர்:

அரியலூா் மாவட்டம், ஆா்.எஸ். மாத்தூா் ரயில் தண்டவாளத்தில் முகம் சிதைந்த நிலையில் கிடந்த ஆண் சடலம் வியாழக்கிழமை மீட்கப்பட்டது.

ஆா்.எஸ். மாத்தூா் ரயில்வே கேட் அருகில் சுமாா் 32 வயது மதிக்கதக்க முகம் சிதைந்த நிலையில் ஆண் சடலம் கிடந்தது. இதையறிந்த அப்பகுதி மக்கள், ரயில்வே பாதுகாப்பு படையினருக்கு தகவல் தெரிவித்தனா். சம்பவ இடத்துக்கு வந்த போலீஸாா் சடலத்தை மீட்டு , அரியலூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.