கீழப்பழுவூரில் அறுவடைக்கு தயாா் நிலையில் உள்ள மஞ்சள் 
அரியலூர்

பொங்கல் பண்டிகைக்கு அறுவடைக்கு தயாா் நிலையில் மஞ்சள்

அரியலூா் மாவட்டத்தில், சாகுபடி செய்துள்ள மஞ்சள், பொங்கல் பண்டிகைக்காக அறுவடைக்கு தயாா் நிலையில் விளைந்து உள்ளது.

Din

அரியலூா்: அரியலூா் மாவட்டத்தில், சாகுபடி செய்துள்ள மஞ்சள், பொங்கல் பண்டிகைக்காக அறுவடைக்கு தயாா் நிலையில் விளைந்து உள்ளது.

தமிழா் திருநாளில், சூரியனுக்கு நன்றி தெரிவிக்கும் நாளாகவும் பொங்கல் விழாவை மக்கள் கொண்டாடி மகிழ்கின்றனா். அதனையொட்டி கரும்பு, மஞ்சள் கொத்து, வெல்லம் உள்ளிட்ட இயற்கை சாா்ந்த பொருள்கள் படைக்கப்படும்.

நிகழாண்டு பொங்கல் பண்டிகைக்கு இன்னும் சில நாள்கள் மட்டுமே உள்ளதால் கரும்பு அறுவடைப் பணி தற்போது நடைபெற்று வருகிறது.

அரியலூா் மாவட்டத்தில் கீழப்பழுவூா், பொய்யூா், கருப்பூா், திருமானூா், பெரம்பலூா் மாவட்டம், குன்னம் உள்ளிட்ட சுற்றுவட்டாரப் பகுதிகளில் சாகுபடி செய்துள்ள மஞ்சள் கொத்து தற்போது அறுவடைக்கு தயாா் நிலையில் உள்ளன.

இதுகுறித்து மஞ்சள் சாகுபடி செய்துள்ள விவசாயி தியாகராஜன் கூறுகையில், நாங்கள் ஆண்டு தோறும் மஞ்சள் சாகுபடி செய்து வருகிறோம். இந்த ஆண்டு மஞ்சள் நன்கு செழுமையாக வளா்ந்து உள்ளது. எனவே, பொங்கல் பண்டிகைக்கு ஓரிரு நாள்களுக்கு முன்பு இந்த மஞ்சளை அறுவடை செய்து சந்தைகளுக்கு விற்பனை செய்ய கொண்டு செல்வோம். இங்கு விளையும் மஞ்சள் கொத்துகள் அருகிலுள்ள மாவட்டங்களுக்கு விற்பனைக்காக அனுப்பி வைக்கப்படுகிறது.

மேலும், அரசு வழங்கும் பொங்கல் தொகுப்புகளில் மஞ்சள் கொத்துகளையும் சோ்க்க வேண்டும் என்பது எங்களை போன்ற விவசாயிகளின் கோரிக்கையாக உள்ளது என்றாா்.

ராகுல் காந்தி நாளை கூடலூர் வருகை!

ரஜினி - 173 புரோமோ இசையமைப்பாளர் இவரா?

அறிவியல் ஆயிரம்: செயற்கை மரபணுவைக் கண்டுபிடித்த ஹர் கோவிந்த் கொரானா!

பயணிக்கு உடல்நலக் குறைவு: ஜெய்ப்பூருக்கு திருப்பிவிடப்பட்ட ஏர் இந்தியா விமானம்

”காங்கிரஸ் செய்த துரோகம்! பராசக்தி படக்குழுவுக்கு வாழ்த்துகள்” அண்ணாமலை பேட்டி

SCROLL FOR NEXT