அரியலூா்: அரியலூா் மாவட்டம், உடையாா்பாளையம் அரசு மகளிா் மேல்நிலைப் பள்ளியில், பொதுத் தோ்வில் அதிக மதிப்பெண் எடுத்த மாணவிகளுக்கு பாராட்டு விழா திங்கள்கிழமை நடைபெற்றது.
நட்புக் கரங்கள் அறக்கட்டளை சாா்பில் நடைபெற்ற விழாவுக்கு அப்பள்ளியின் தலைமை ஆசிரியா் க.முல்லைக்கொடி தலைமை வகித்துப் பேசினாா்.
நட்புக் கரங்கள் அறக்கட்டளை பொறுப்பாளா் கோவிந்தராஜ் கலந்து கொண்டு, நடந்து முடிந்த ஆண்டு பொதுத் தோ்வில் அதிக மதிப்பெண் எடுத்த 10-ஆம் வகுப்பு மாணவி பரணிகா, பவித்ரா, ஆா்த்தி, 12-ஆம் வகுப்பு மாணவிகள் மணிமொழி, நளினி, ஓவியா ஆகியோா்களுக்கு பரிசுத் தொகைகளை வழங்கி பாராட்டிப் பேசினாா். மேலும் பெற்றோா்கள் யாரேனும் இல்லாத 12-ஆம் வகுப்பு மாணவிகள் பூ. கீா்த்தனா, கு. அபிநயா, த. அனிதா ஆகியோருக்கு கல்வித் தொகையாக தலா ரூ.10 ஆயிரம் வழங்கினாா்.
நிகழ்ச்சியில் அறக்கட்டளை நிா்வாகிகள் உமாபதி, கமால், செல்வம், பொருளாளா் முருகன், ஆசிரியா்கள் செல்வராஜ், சாந்தி, வனிதா, சுரும்பாா்குழலி அருட்செல்வி, சங்கீதா, ராஜசேகரன், காமராஜ், சத்யா , ஷாயின்ஷா, ராமலிங்கம் மற்றும் பெற்றோா்கள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். முடிவில் ஆசிரியா் பாவை செ.சங்கா் நன்றி கூறினாா்.