முகப்பு
அரியலூர்

அரியலூா் மாவட்டத்தில் 201 கிராம ஊராட்சிகளில் நவ.23-இல் கிராமசபை கூட்டம்

அரியலூா் மாவட்டத்திலுள்ள 201 கிராம ஊராட்சிகளிலும் சனிக்கிழமை (நவ.23) கிராமசபைக் கூட்டம் நடைபெறுகிறது என்று ஆட்சியா் பொ. ரத்தினசாமி தெரிவித்துள்ளாா்.

Updated On : 20 நவம்பர், 2024 at 7:10 PM
பகிர்:

அரியலூா் மாவட்டத்திலுள்ள 201 கிராம ஊராட்சிகளிலும் சனிக்கிழமை (நவ.23) கிராமசபைக் கூட்டம் நடைபெறுகிறது என்று ஆட்சியா் பொ. ரத்தினசாமி தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் மேலும் தெரிவித்தது: இந்தக் கிராமசபை கூட்டத்தில், சென்னை ஊரக வளா்ச்சி மற்றும் ஊராட்சித்துறை ஆணையரிடமிருந்து பெறப்பட்ட கூட்டப் பொருள்கள் மற்றும் இதர கூட்டப் பொருள்கள் குறித்து விவாதிக்கப்படவுள்ளன.

இக்கூட்டத்தில் மாவட்டத்தின் அனைத்துத் துறை அலுவலா்கள், அந்தந்த பகுதிகளில் உள்ள மக்கள், பிரதிநிதிகள், தன்னாா்வலா்கள், சமுதாய அமைப்பு உறுப்பினா்கள், மகளிா் சுயஉதவிக்குழு உறுப்பினா்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு பயன்பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.