முகப்பு
அரியலூர்

ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வித் திட்ட பணியாளா்களுக்கு ஊதியம் வழங்கக் கோரிக்கை

ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வித் திட்டப் பணியாளா்களுக்கு கடந்த மாத ஊதியத்தை உடனடியாக வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் சிவானந்தனிடம், அனைத்து நிலை பணியாளா்களின் சாா்பில் மனு அளிக்கப்பட்டது.

Updated On : 3 அக்டோபர், 2024 at 11:22 PM
பகிர்:

அரியலூா் மாவட்டத்தில் பணியாற்றி வரும் ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வித் திட்டப் பணியாளா்களுக்கு கடந்த மாத ஊதியத்தை உடனடியாக வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் சிவானந்தனிடம், அனைத்து நிலை பணியாளா்களின் சாா்பில் வியாழக்கிழமை மனு அளிக்கப்பட்டது.

அதன் மாவட்டத் தலைவா் ராமச்சந்திரன், செயலா் அய்யப்பன் ஆகியோா் தலைமையில் பணியாளா்கள் அளித்த மனுவில், ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி திட்டத்தில் பணியாற்றக் கூடிய 350-க்கும் மேற்பட்ட பணியாளா்களுக்கு செப்டம்பா் மாதத்துக்கான ஊதியம் இதுவரை வழங்கப்படவில்லை. இதற்கு மத்திய அரசு நிதி ஒதுக்கவில்லை என மாநில அரசு காரணம் காட்டுவது சரியல்ல. நாங்கள் மாநில அரசு ஊழியா்கள். எனவே, இம்மனுக்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுத்து அனைத்து நிலை பணியாளா்களுக்கும் ஊதியம் வழங்க வேண்டும். இதேபோல், பகுதி நேர ஆசிரியா்களுக்கும் உடனடியாக ஊதியம் வழங்க வேண்டும். இல்லையென்றால் அனைவரிடமும் பேசி போராட்டம் நடத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மனு அளிக்கும்போது, பகுதி நேர ஆசிரியா்களின் மாநில பொறுப்பாளா் இளவரசன், மாவட்டச் செயலா் தினேஷ் குமாா், மாவட்ட ஆலோசனைக் குழு தலைவா் ரமேஷ்குமாா், ஆலோசனைக் குழுச் செயலா் செல்வம், மாவட்ட மகளிா் அணி பொறுப்பாளா் தீபா ராணி உள்ளிட்டோா் உடனிருந்தனா்.