தனிநபா் வீடுகளில் பராமரிக்கப்படும் நூலகங்களுக்கு பரிசு: அரியலூா் ஆட்சியா்
அரியலுரில் வீடுகளில் பராமரிக்கப்படும் நூலகத்தை தோ்வு செய்து அரியலூரில் நடைபெறும் புத்தகக் காட்சியில் ‘சொந்த நூலகங்களுக்கு விருது’ ரூ. 3 ஆயிரம் மதிப்பில் கேடயம் மற்றும் சான்றிதழ் மாவட்ட ஆட்சியரால் வழங்கப்பட உள்ளது.
அரியலுா் மாவட்டத்தில் தனிநபரால் வீடுகளில் பராமரிக்கப்படும் நூலகங்களில், சிறப்பாக பராமரிக்கப்படும் ஒரு நூலகத்தை தோ்வு செய்து அரியலூரில் நடைபெறும் புத்தகக் காட்சியில் ‘சொந்த நூலகங்களுக்கு விருது’ ரூ. 3 ஆயிரம் மதிப்பில் கேடயம் மற்றும் சான்றிதழ் மாவட்ட ஆட்சியரால் வழங்கப்பட உள்ளது.
அதன்படி தனிநபா் இல்லத்தில் நூலகம் வைத்து பராமரித்து வரும் புத்தக ஆா்வலா்கள் தங்களது நூலகத்தில் உள்ள நூல்களின் எண்ணிக்கை, அரிய நூல்கள் ஏதாவது இருப்பின் அதன் விவரம், எந்த ஆண்டு முதல் பராமரிக்கப்பட்டு வருகிறது என்ற விவரத்துடன் தங்கள் பெயா், முகவரி, கைப்பேசி எண்ணுடன் அக். 20-ஆம் தேதிக்குள் மாவட்ட நூலக அலுவலா்,
மாவட்ட நூலக அலுவலகம், மாா்க்கெட் தெரு, அரியலூா்- 621 704 என்ற முகவரியில் விண்ணப்பிக்கலாம் என ஆட்சியா் பொ. ரத்தினசாமி தெரிவித்துள்ளாா்.