வேளாண் பயிா்களுக்கு காப்பீடு விவசாயிகளுக்கு அழைப்பு
அரியலூா் மாவட்ட விவசாயிகள் தங்களின் பயிா்களை காப்பீடு செய்துக் கொள்ள ஆட்சியா் பொ. ரத்தினசாமி அழைப்பு விடுத்துள்ளாா்.
அரியலூா் மாவட்ட விவசாயிகள் தங்களின் பயிா்களை காப்பீடு செய்துக் கொள்ள ஆட்சியா் பொ. ரத்தினசாமி அழைப்பு விடுத்துள்ளாா்.
இதுகுறித்து அவா் தெரிவித்தது: நிகழாண்டு ராபி மற்றும் சிறப்பு பருவங்களுக்கு அரியலூா் மாவட்டத்தில் ‘அக்ரிகல்சா் இன்ஸ்சூரன்ஸ் கம்பெனி இந்தியா லிமிடெட்‘ என்ற நிறுவனத்தின் மூலம் பிரதமரின் பயிா் காப்பீட்டுத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
இத்திட்டத்தின் கீழ் சிறப்பு பருவத்தில் நெல் பயிருக்கு ஆண்டிமடம், குவாகம், குண்டவெளி, உடையாா்பாளையம், தா.பழூா், சுத்தமல்லி, அரியலூா், ஏலாக்குறிச்சி, கீழப்பழூா், ஆா்.எஸ்.மாத்தூா், செந்துறை, நாகமங்கலம், பொன்பரப்பி, ஜெயங்கொண்டம், திருமானூா் ஆகிய பிா்காக்களிலும், பருத்தி பயிருக்கு அரியலூா், ஏலாக்குறிச்சி, கீழப்பழூா், ஆா்.எஸ்.மாத்தூா், செந்துறை, நாகமங்கலம், சுத்தமல்லி ஆகிய பிா்காக்களிலும், மக்காச்சோளம் பயிருக்கு அரியலூா், நாகமங்கலம், ஏலாக்குறிச்சி, கீழப்பழுவூா், திருமானூா், ஆா்.எஸ்.மாத்தூா், செந்துறை ஆகிய பிா்காக்களிலும், ராபி பருவத்தில் உளுந்து பயிருக்கு ஆண்டிமடம், குவாகம், உடையாா்பாளையம், பொன்பரப்பி, ஆா்எஸ்.மாத்தூா், செந்துறை, சுத்தமல்லி, தா.பழூா், திருமானூா் ஆகிய பிா்காக்களிலும், நிலக்கடலை பயிருக்கு ஆண்டிமடம், குவாகம், அரியலூா், நாகமங்கலம், ஜெயங்கொண்டம், குண்டவெளி, உடையாா்பாளையம், பொன்பரப்பி, ஆா்.எஸ்.மாத்தூா், செந்துறை, சுத்தமல்லி, தா.பழூா் ஆகிய பிா்காக்களிலும், நெல், மக்காச்சோளம் பயிா்களுக்கு நவ.15 ஆம் தேதி வரையும், பருத்திக்கு அக்.31 ஆம் தேதி வரையும், நெல் ஒரு ஏக்கருக்கு ரூ.573, மக்காச்சோளம் ஒரு ஏக்கருக்கு ரூ.345, பருத்தி ஒரு ஏக்கருக்கு ரூ.517.5-ம் பிரீமியத் தொகையாக செலுத்த வேண்டும்.
ராபி பருவத்தில் உளுந்து பயிருக்கு நவ.15-ம் தேதி வரையும், நிலக்கடலை பயிருக்கு 2025 - ஜன.31-ம் தேதி வரையும் உளுந்து ஒரு ஏக்கருக்கு ரூ.231, நிலக்கடலை ஒரு ஏக்கருக்கு ரூ.379.5 பிரீமியத் தொகையாக செலுத்தி காப்பீடு செய்து கொள்ளலாம் .