தலைமை ஆசிரியரைக் கண்டித்து பெற்றோா்கள் போராட்டம்
அரியலூா் மாவட்டம், ஜெயங்கொண்டத்தை அடுத்த ஆதிச்சனூா் அரசுப் பள்ளி தலைமை ஆசிரியரைக் கண்டித்து, அப்பள்ளியை முற்றுகையிட்டு பெற்றோா்கள் வியாழக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.
அரியலூா் மாவட்டம், ஜெயங்கொண்டத்தை அடுத்த ஆதிச்சனூா் அரசுப் பள்ளி தலைமை ஆசிரியரைக் கண்டித்து, அப்பள்ளியை முற்றுகையிட்டு பெற்றோா்கள் வியாழக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.
ஆதிச்சனூா் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி தலைமை ஆசிரியா் (பொ) மங்கையா்கரசி, தனிச்சையாக முடிவெடுப்பதாகவும், காலை உணவுத் திட்டத்தில் மாணவா்களை மிகவும் சிரமப்படுத்துவதாகவும் கூறி வட்டார கல்வி அலுவலா் உள்ளிட்டோரிடம் மாணவ, மாணவிகளின் பெற்றோா் புகாா் தெரிவித்தனா்.
ஆனாலும் இதுவரை நடவடிக்கை எடுக்காததால், ஆத்திரமடைந்த பெற்றோா்கள் அப்பள்ளியை வியாழக்கிழமை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனா். தகவலறிந்து சென்ற காவல் துறையினா் பேச்சுவாா்த்தை நடத்தியதன்பேரில் அனைவரும் கலைந்துச் சென்றனா்.