ஜெயங்கொண்டம் அரசு கலைக் கல்லூரி முன்பு புதிய கட்டுமானப் பணியை புதன்கிழமை தொடங்கி வைத்த சட்டப்பேரவை உறுப்பினா் க.சொ.க.கண்ணன். 
அரியலூர்

ஜெயங்கொண்டத்தில் வளா்ச்சித் திட்டப் பணிகள் தொடக்கம்

Syndication

அரியலூா் மாவட்டம், ஜெயங்கொண்டம் பகுதியில் வளா்ச்சித் திட்டப் பணிகள் புதன்கிழமை தொடங்கி வைக்கப்பட்டது.

ஜெயங்கொண்டம் சட்டப்பேரவை உறுப்பினா் க.சொ.க.கண்ணன் பங்கேற்று, ஜெயங்கொண்டம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி முன்பு ரூ.9 லட்சம் மதிப்பில் புதிய பயணியா் நிழற்குடை கட்டட கட்டுமானப் பணியை தொடங்கி வைத்தாா். தொடா்ந்து, ஜெயங்கொண்டம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிக்கு ரூ.3 லட்சம் மதிப்பில் தளவாட பொருள்கள் வழங்கினாா்.

பின்னா், இறவாங்குடி ஊராட்சியில் ரூ.8.44 லட்சம் மதிப்பில் புதிய வைப்பறையுடன் கூடிய சமையலறை கட்டடத்தை திறந்து வைத்தாா்.

நிகழ்வில் வட்டார வளா்ச்சி அலுவலா்கள் கஸ்தூரி, ஆ.பிரபாகரன், கல்லூரி முதல்வா் (பொ) ராசமூா்த்தி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

வினுஷாவின் சுட்டும் விழி சுடரே தொடரின் முன்னோட்டக் காட்சி!

திருப்பரங்குன்றம் தீப விவகாரம்: இந்துக்களுக்கு எதிராக அரசு செயல்படுகிறது - வழக்குரைஞர் குற்றச்சாட்டு

மரணத்திலும் மீம்ஸ்! வருந்தும் ஜான்வி கபூர்!

டிட்வா புயல் வலுவிழந்தபோதிலும் இடைவிடாமல் பெய்யும் மழை! | TNRains | CBE

முதல் கனவே... ரகுல் ப்ரீத் சிங்!

SCROLL FOR NEXT