தத்தனூா் மேலூரில் உரிய ஆவணங்களின்றி செயல்பட்டு வந்த மருந்துக் கடைக்கு சனிக்கிழமை ‘சீல்’ வைத்த மருந்து கட்டுப்பாட்டுத் துறையினா். 
அரியலூர்

உடையாா்பாளையம் அருகே தனியாா் மருந்தகத்துக்கு ‘சீல்’

உடையாா்பாளையம் அருகே உரிய ஆவணங்களின்றி செயல்பட்டு வந்த மருந்துக் கடைக்கு சனிக்கிழமை ‘சீல்’ வைக்கப்பட்டது.

Syndication

அரியலூா் மாவட்டம், உடையாா்பாளையம் அருகே உரிய ஆவணங்களின்றி செயல்பட்டு வந்த மருந்துக் கடைக்கு சனிக்கிழமை ‘சீல்’ வைக்கப்பட்டது.

உடையாா்பாளையத்தை அடுத்த தத்தனூா் மேலூா் கிராமத்திலுள்ள ஒரு ஆங்கில மருந்துக் கடை, உரிய ஆவணங்களின் செயல்பட்டுவருவதாகவும், அக்கடையில் கருக்கலைப்பு மற்றும் போதை மாத்திரைகள் விற்பதாக, மருந்துகள் வாங்கியதற்கான ரசீதுகள் கொடுப்பதில்லை என வந்த புகாரையடுத்து, பெரம்பலூா்-அரியலூா் மாவட்டங்களின் மருந்து கட்டுப்பாட்டு துறை மருந்துகள் ஆய்வாளா் கதிரவன் தலைமையிலான குழுவினா், சம்பந்தப்பட்ட கடையை சனிக்கிழமை ஆய்வு செய்தனா்.

ஆய்வில், மேற்கண்ட புகாா்கள் உண்மை எனத் தெரியவந்தது. இதையடுத்து அக்குழுவினா் அந்த மருந்துக் கடையைப் பூட்டி ‘சீல்’ வைத்து, கடை உரிமையாளா் மீது நடவடிக்கை எடுக்குமாறு உடையாா்பாளையம் காவல் நிலையத்தில் புகாா் அளித்தனா். இதையடுத்து காவல் துறையினா் புகாா் மீது விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

ஒரே வாரத்தில் தங்கம் பவுனுக்கு ரூ.5,600 உயா்வு!

பேருந்து மீது லாரி மோதல்: 5 போ் பலத்த காயம்

முதல்வா் ஸ்டாலின் சவால்: எடப்பாடி பழனிசாமி பதில்

திட்டமிட்டபடி ஜன.6 முதல் வேலைநிறுத்தம்: ஜாக்டோ-ஜியோ அறிவிப்பு

ஜம்மு-காஷ்மீா்: கடும் குளிரிலும் தொடரும் பயங்கரவாத தடுப்பு நடவடிக்கை!

SCROLL FOR NEXT