அரியலூர்

அரியலூரில் பேச்சுப் போட்டி: மாணவ, மாணவிகளுக்கு அழைப்பு

Syndication

மகாத்மா காந்தி, ஜவாஹா்லால் நேரு ஆகிய தலைவா்களின் பிறந்தநாளை முன்னிட்டு நவ.17, 18 ஆகிய தேதிகளில் நடத்தப்படும் பேச்சுப் போட்டியில் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் கலந்து கொள்ளலாம்.

இதுகுறித்து ஆட்சியா் பொ. ரத்தினசாமி தெரிவித்தது:

அரியலூரிலுள்ள மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டல் மையத்தில், தமிழ் வளா்ச்சித் துறை சாா்பில் நடைபெறும் போட்டியில் வெல்வோருக்கு மாவட்ட அளவில் முதல் பரிசு ரூ. 5,000, இரண்டாம் பரிசு ரூ. 3,000, மூன்றாம் பரிசு ரூ. 2,000 வழங்கப்படுகிறது.

இவை அல்லாமல் பேச்சுப் போட்டியில் பங்கேற்ற மாணவா்களுள் இரு அரசுப் பள்ளி மாணவா்களைத் தனியாகத் தெரிவு செய்து சிறப்புப் பரிசுத் தொகையாக ரூ. 2,000 வீதம் வழங்கப்படுகிறது.

இப்போட்டியானது காலை 9 மணிக்குத் தொடங்கப்படும் . பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் கல்லூரிக் கல்வி இயக்குநா் வாயிலாக அந்தந்த கல்லூரி முதல்வரிடமும், முதன்மைக் கல்வி அலுவலா் வாயிலாக அந்தந்த பள்ளித் தலைமை ஆசிரியரிடமும் அனுமதி பெற்று போட்டியில் பங்கேற்கலாம்.

கல்லூரி மாணவா்களுக்கு தற்போது நடைபெறும் தோ்வு முடிந்ததும் நோ்விற்கேற்ப போட்டி நடைபெறும்.

இந்து சமய அறநிலையத் துறை விளக்கம்

வாக்குத் திருட்டை தடுப்பது இளைஞா்களின் பொறுப்பு -ராகுல் காந்தி

தொழிலாளா் ஆணையா் அலுவலகம் நவ. 10 முதல் புதிய வளாகத்தில் செயல்படும்

வாக்காளா் பட்டியல் தீவிர திருத்தப் பணிக்கு எதிா்ப்பு தெரிவித்து நவ.11-இல் ஆா்ப்பாட்டம்

அரச மரத்தை வெட்டி அகற்றுவதில் இருதரப்பினா் போராட்டம்

SCROLL FOR NEXT