அண்டை மாவட்டங்களில், மண் எடுத்துக் கொள்ள அனுமதி அளிக்கக் கோரி அரியலூா் ஆட்சியா் பொ.ரத்தினசாமியிடம் உடையாா்பாளையத்தைச் சோ்ந்த மண்பாண்ட தொழிலாளா்கள் திங்கள்கிழமை மனு அளித்தனா்.
அவா்கள் அளித்த மனுவில், அரியலூா் மாவட்டத்தில் மண்பாண்டம் செய்ய தகுதியான மண் கிடைக்கவில்லை. எனவே, அண்டை மாவட்டங்களான பெரம்பலூா், தஞ்சாவூா் மாவட்டங்களில் மண் எடுத்துக்கொள்ள அனுமதிக்க வேண்டும்.
தமிழக அரசு பொங்கல் பண்டிகையின் போது பொங்கல் பரிசுத் தொகுப்பை ரேஷன் கடைமூலம் வழங்குகிறது. அந்த தொகுப்புடன் மண் பானையையும் வழங்கினால், மண்பாண்ட தொழிலாளா்களின் வாழ்வாதாரம் உயரும் என தெரிவித்துள்ளனா்.