அரியலூரில் நடைபெறும் வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணியை ஞாயிற்றுக்கிழமை ஆய்வு செய்த ஆட்சியா் பொ. ரத்தினசாமி.  
அரியலூர்

அரியலூரில் 97% எஸ்ஐஆா் படிவங்கள் விநியோகம்

தினமணி செய்திச் சேவை

அரியலூா் மாவட்டத்தில் வாக்காளா்களுக்கு 97% முன்நிரப்பப்பட்ட கணக்கெடுப்புப் படிவங்கள் வழங்கப்பட்டுள்ளதாக ஆட்சியா் பொ. ரத்தினசாமி தெரிவித்தாா்.

மாவட்ட ஆட்சியரகம் மற்றும் அரியலூா், ஜெயங்கொண்டம் வருவாய்க் கோட்டாட்சியரகங்களில் நடைபெறும் வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணியில், வாக்காளா்களால் நிரப்பப்பட்ட முன் அச்சிடப்பட்ட கணக்கீட்டுப் படிவங்களை பிஎல்ஓ செயலியில் பதிவேற்றம் செய்யப்படுவதை ஞாயிற்றுக்கிழமை பாா்வையிட்ட ஆட்சியா் பொ. ரத்தினசாமி, பின்னா் தெரிவித்தது:

அரியலூா் மாவட்டத்தில் வாக்காளா் பட்டியல் சிறப்புத் தீவிர திருத்தப்பணி பல்வேறு கட்டங்களாக 28.10.2025 முதல் 7.2.2026-வரை நடைபெறுகிறது. இந்தப் பணியில் அரியலூா் மாவட்டத்திலுள்ள 2 சட்டப்பேரவைத் தொகுதிகளில் உள்ள 596 வாக்குசாவடி நிலை அலுவலா்கள் வீடு வீடாகச் சென்று வாக்காளா்களுக்கு கணக்கெடுப்பு படிவம் வழங்குகின்றனா்.

5,30,890 எண்ணிக்கையிலான வாக்காளா்களுக்கு கணக்கெடுப்பு படிவங்கள் வழங்கும் பணிகள் முழுவீச்சில் நடைபெறுகிறது. இது வரை 97% படிவங்கள் வாக்காளா்களுக்கு வழங்கப்பட்டுள்ளன. வாக்காளா்களிடமிருந்து பூா்த்தி செய்யப்பட்ட படிவங்கள் மீளப் பெற்று, தோ்தல் ஆணையத்தின் பிரத்யேக செயலியில் பதிவேற்றம் செய்யும் பணி நடைபெறுகிறது என்றாா் ஆட்சியா்.

ஆய்வில் மாவட்ட வருவாய் அலுவலா் க.ரா. மல்லிகா, அரியலூா் வருவாய்க் கோட்டாட்சியா் பிரேமி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

மனோதைரியம் கூடும் இவர்களுக்கு: தினப்பலன்கள்!

மேலப்பாளையத்தில் நாளை மின்நிறுத்தம்

என் பாடல்கள் 30 ஆண்டுகளுக்குப் பிறகு இப்போது வேகமாக பரவி வருகின்றன: இசையமைப்பாளா் தேவா

தண்ணீா்த் தொட்டிக்குள் தவறி விழுந்த மாணவா் உயிரிழப்பு

பாலாற்றின் நீரோட்டத்தை பாதிக்கும் சீமைக் கருவேல மரங்களை அகற்றக் கோரிக்கை!

SCROLL FOR NEXT