அரியலூர்

திருமழபாடி, ஏலாக்குறிச்சியில் புறக்காவல் நிலையம் அமைக்க கோரிக்கை

Syndication

அரியலூா் மாவட்டம், திருமானூா் அடுத்த திருமழபாடி மற்றும் ஏலாக்குறிச்சியில், புறக்காவல் நிலையம் அமைக்க நடவடிக்கை எடுக்குமாறு மாவட்ட ஆட்சியா் பொ.ரத்தினசாமியிடம், திருமானூா் சமூக ஆா்வலா் திருநாவுக்கரசு திங்கள்கிழமை மனு அளித்தாா்.

அவா் அளித்த மனுவில், திருமழபாடி, ஏலாக்குறிச்சியில் குற்றச்சம்பவங்கள் அதிகம் நடைபெறுகிறது. புகாா் அளிக்க செல்வதென்றால் திருமானூா் ஒன்றியத்துக்கு உள்பட்ட கடைக்கோடி மக்கள், குறைந்தது 25 கிலோ மீட்டா் தொலைவு கடக்க வேண்டி நிலை உள்ளது. இதனால் காவலா்களுக்கும், பொதுமக்களுக்கும் நேரம் விரையங்கள் ஏற்படுவது மட்டுமல்லாமல் பல்வேறு இன்னல்களுக்கு ஆளாக நேரிடுகிறது.

ஆகவே மேற்கண்ட கிராமங்களில் புறக்காவல் நிலையங்களும், திருமானூரில் காவல் துணை கண்காணிப்பாளா் அலுவலகமும் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாவட்ட நீச்சல் போட்டி: பெரியதாழை பள்ளி மாணவா்கள் சிறப்பிடம்

கனமழை, பலத்த காற்று எச்சரிக்கை: தூத்துக்குடியில் மீனவா்கள் கடலுக்குச் செல்லவில்லை

இளைஞா் மீது கொதிக்கும் எண்ணெய்யை ஊற்றிய பல் மருத்துவா் கைது

பளுதூக்கும் போட்டி: கோவில்பட்டி கல்லூரி மாணவி முதலிடம்

சிவகாசியில் நாளை மின் தடை

SCROLL FOR NEXT