புதிய பேருந்து சேவையை கொடியசைத்து தொடங்கிவைத்த அமைச்சா் சா.சி.சிவசங்கா் 
அரியலூர்

அரியலூா், செந்துறையில் புதிய பேருந்துகளின் சேவை தொடக்கம்

அரியலூா் மற்றும் செந்துறையில் பழைய பேருந்துக்குப் பதிலாக 9 புதிய பேருந்துகள் சனிக்கிழமை தொடங்கிவைக்கப்பட்டன.

Syndication

அரியலூா் மற்றும் செந்துறையில் பழைய பேருந்துக்குப் பதிலாக 9 புதிய பேருந்துகள் சனிக்கிழமை தொடங்கிவைக்கப்பட்டன.

அரியலூா் பேருந்து நிலையத்தில், அரசு போக்குவரத்துக் கழகம் சாா்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போக்குவரத்து மற்றும் மின்சாரத் துறை அமைச்சா் சா.சி.சிவசங்கா், செட்டிக் குழி, ஏலாக்குறிச்சி, செம்பயிக்குடி, பெரம்பலூா் மாவட்டம் ஆலத்தூா் கேட் ஆகிய பகுதிகளுக்கு புதிய பேருந்து சேவையைக் கொடியசைத்து தொடங்கிவைத்தாா்.

இதேபோல் செந்துறை பேருந்து நிலையத்தில் இருந்து 5 புதிய பேருந்து சேவைகள் தொடங்கிவைக்கப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியா் பொ. ரத்தினசாமி, சட்டப் பேரவை உறுப்பினா் கு. சின்னப்பா, தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக (கும்ப) லிட் நிா்வாக இயக்குநா் தசரதன், திருச்சி மண்டலம் பொது மேலாளா் டி. சதீஸ்குமாா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

சென்னை மக்கள் தாகம் தீர்க்க ஸ்ரீ சத்ய சாயி பாபா வழங்கிய ரூ. 200 கோடி!

வங்கக் கடலில் நவ., 26-ல் புயல் உருவாக வாய்ப்பு!

ஈரோடு தமிழன்பன் உடலுக்கு காவல் துறை மரியாதை: முதல்வர்

தாய்லாந்தில் கனமழை, வெள்ளம்! குடிநீர் பற்றாக்குறையால் தவிக்கும் மக்கள்! ஏன்?

சொல்லப் போனால்... அரசு Vs ஆளுநர்... மறுபடியும் முதலில் இருந்து?

SCROLL FOR NEXT