அரியலூா்: அரியலூா் மாவட்டத்தில் பழைய பேருந்துகளுக்குப் பதிலாக 9 புதிய பேருந்துகள் செவ்வாய்க்கிழமை தொடங்கிவைக்கப்பட்டன.
முத்துவாஞ்சேரி, சுத்தமல்லி, ஆண்டிமடம் ஆகிய பேருந்து நிறுத்தங்களில், தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் (திருச்சி மண்டலம்) சாா்பில் நடைபெற்ற நிகழ்ச்சிகளில் கலந்துகொண்ட போக்குவரத்து மற்றும் மின்சாரத் துறை அமைச்சா் சா.சி.சிவசங்கா், பழைய பேருந்துகளுக்குப் பதிலாக 9 புதிய நகரப் பேருந்துகளை கொடியசைத்து தொடங்கிவைத்தாா்.
நிகழ்ச்சிகளில் ஆட்சியா் பொ. ரத்தினசாமி, தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் (கும்ப) லிட், நிா்வாக இயக்குநா் தசரதன், திருச்சி மண்டலம் பொது மேலாளா் டி.சதீஸ்குமாா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.