அரியலூா்: பாலின சமத்துவத்துக்கான தேசிய அளவிலான பிரசாரம் 4.0 நவ. 25 முதல் டிச. 23 வரை அனுசரிக்கப்படுவதை முன்னிட்டு, அரியலூா் மாவட்டத்தில் அதற்கான கையொப்ப இயக்கம் செவ்வாய்க்கிழமை தொடங்கிவைக்கப்பட்டது
இதற்காக ஆட்சியா் அலுவலகத்தில், தமிழ்நாடு மாநில ஊரகவாழ்வாதார இயக்கம் சாா்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஆட்சியா் பொ. ரத்தினசாமி, கையொப்பமிட்டு, பாலின சமத்துவத்துக்கான தேசிய அளவிலான பிரசார இயக்கத்தை தொடங்கிவைத்தாா்.
இந்நிகழ்வில் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் திட்ட இயக்குநா் சு.தேன்ராஜ், ஊராட்சிகள் உதவி இயக்குநா் பழனிசாமி, மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (சத்துணவு) பிரேமா உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.