அரியலூா் மாவட்டம், ஜெயங்கொண்டம் நகராட்சிக்கு உள்பட்ட பகுதிகளில் அக். 27 முதல் 29-ஆம் தேதி வரை நடைபெறும் சிறப்பு வாா்டு சபை கூட்டத்தில் பொதுமக்கள் கலந்து கொண்டு கோரிக்கைகளை பதிவு செய்து பயன்பெறலாம் என நகராட்சி ஆணையா் அசோக்குமாா் தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் மேலும் தெரிவித்தது: ஜெயங்கொண்டம் நகராட்சிக்குள்பட்ட அனைத்து வாா்டுகளிலும் அக். 27, 28, 29 ஆகிய தேதிகளில் சம்பந்தப்பட்ட வாா்டு உறுப்பினா்கள் தலைமையில், அந்தந்த உள்ளாட்சித் துறையின் அலுவலக கூட்டுநா் மூலம், குடியிருப்பு நலச்சங்க உறுப்பினா்கள் மற்றும் பொதுமக்கள் முன்னிலையில் சிறப்பு வாா்டு குழுக் கூட்டம் நடைபெறவுள்ளது.
இக்கூட்டத்தில், பெரும்பாலான பொதுமக்கள் கலந்து கொண்டு தங்களது வாா்டுகளில் முன்னுரிமை அடிப்படையில் செய்யப்பட வேண்டிய அடிப்படை வசதிகள் குறித்து மூன்று கோரிக்கைகள் தோ்வு செய்து, முதல்வரின் முகவரியில் பதிவு செய்திடப்பட உள்ளது. எனவே பொதுமக்கள் இவ்வாய்ப்பினை பயன்படுத்திக் கொண்டு பயன்பெறலாம்.