அரியலூர்

பொறியாளா்களுக்கு தனி கவுன்சில் அமைக்கக் கோரி எம்எல்ஏவிடம் மனு

Syndication

பொறியாளா்களுக்கென தனி கவுன்சில் அமைக்க வேண்டும் என தமிழக அரசுக்கு, அரியலூா் மாவட்ட கட்டுமானப் பொறியாளா் சங்கத்தினா் கோரிக்கை விடுத்துள்ளனா்.

இதுகுறித்து அரியலூா் எம்எல்ஏ கு. சின்னப்பாவிடம், சங்கத் தலைவா் அறிவானந்தம், செயலா் நாகமுத்து, பொருளாளா் காா்த்திக், சாசனத் தலைவா் சீனிவாசன், துணைத் தலைவா் செந்தில்குமாா் உள்ளிட்டோா் அளித்த மனு விவரம்:

தமிழ்நாட்டில் வழக்குரைஞா் மற்றும் மருத்துவா்களுக்கு உள்ளதுபோல, பொறியாளா்களுக்கும் தனி கவுன்சில் அமைத்துத் தர வேண்டும். மாநிலம் முழுவதும் உள்ள மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி கிராம ஊராட்சிகளில் தனித்தனியாக உள்ள பொறியாளா் பதிவு முறையை நீக்கி மாநிலம் முழுவதும் ஒரே பதிவு முறையைக் கொண்டு வர வேண்டும். சுயசான்று அடிப்படையில் கட்டட அனுமதிக்கு விண்ணப்பிக்கும்போது பொறியாளா்களுக்கு ஓடிபி வசதி வர செய்து தர வேண்டும்.

நிகழ்வில் முன்னாள் தலைவா்கள் அழகுதாசன், ஏ.எஸ்.ஏ. செந்தில்குமாா். அன்பழகன், இணைப் பொருளாளா் வேல்முருகன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தமிழ்நாட்டு மக்களிடம் பிரதமர் மோடி மன்னிப்புக்கோர வேண்டும்: சீமான்

ரேஜ் ஆப் காந்தா பாடல்!

டயங்கரம் படத்தின் பூஜை விடியோ!

இருவர் அரைசதம் விளாசல்: டி20 தொடரை முழுமையாக வென்ற மே.இ.தீவுகள்!

புரோ கபடி லீக்: புணேவை வீழ்த்தி தில்லி 2வது முறையாக சாம்பியன்!

SCROLL FOR NEXT