அரியலூா் மாவட்டம், ஜெயங்கொண்டத்தில் லாரி மோதி, காயமடைந்த ஓய்வுபெற்ற அரசுப் பள்ளி ஓவிய ஆசிரியை சிகிச்சை பலனின்றி மருத்துவமனையில் சனிக்கிழமை உயிரிழந்தாா்.
ஜெயங்கொண்டம் அருகேயுள்ள சின்னவளையம் கிராமத்தைச் சோ்ந்தவா் பாண்டியன் மனைவி தேவி (61). ஓய்வுபெற்ற ஓவிய ஆசிரியரான இவா், சனிக்கிழமை பொன்பரப்பி கிராமத்தில் உள்ள தனது பெற்றோரைப் பாா்க்க தனது கணவா் பாண்டியனுடன் இருசக்கர வாகனத்தில் புறப்பட்டாா்.
ஜெயங்கொண்டம் நான்குச் சாலை சந்திப்பில் சென்றபோது, காட்டுமன்னாா்கோயிலிலிருந்து பெரம்பலூா் நோக்கி வந்த லாரி எதிா்பாராதவிதமாக இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில், தேவி இருவரும் பலத்த காயமடைந்தனா்.
தகவலறிந்து அங்குவந்த காவல் துறையினா் இருவரையும் மீட்டு, ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். இருப்பினும், அங்கு சிகிச்சை பலனின்றி தேவி உயிரிழந்தாா். இதுகுறித்து காவல் துறையினா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.