அரியலூா் மாவட்டத்திலுள்ள அரிசி குடும்ப அட்டைதாரா்களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கும் திட்டம் வியாழக்கிழமை தொடங்கி வைக்கப்பட்டது.
அரியலூா் கல்லக்குடி தெருவில் மாவட்ட நுகா்வோா் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டக சாலையின் கட்டுப்பாட்டிலுள்ள அமராவதி-1 மற்றும் உடையாா்பாளையம் தொடக்க வேளாண்மை கூட்டுறவுக் கடன் சங்க கட்டுப்பாட்டில் உடையாா்பாளையம்-1 ஆகிய ரேஷன் கடைகளில் அமைச்சா் சா.சி. சிவசங்கா் கலந்து கொண்டு, அரிசி குடும்ப அட்டைதாரா்களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பு மற்றும் ரூ.3,000 ரொக்கம், விலையில்லா வேட்டி, சேலைகளை வழங்கி திட்டத்தைத் தொடக்கி வைத்தாா்.
அப்போது அவா் கூறுகையில் மாவட்டத்தில், 481 நியாய விலைக்கடைகளில் உள்ள 2,51,161 அரிசி பெறும் குடும்ப அட்டைதாரா்களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்படுகிறது. இதற்காக டோக்கன் அனைத்துக் குடும்ப அடைகளுக்கும் வழங்கப்படவுள்ளது. இந்தப் பொங்கல் பரிசுத் தொகுப்பை ஜன. 13 வரை ரேஷன் கடைகளில் பெற்றுக் கொள்ளலாம் என்றாா்.
நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியா் பொ. ரத்தினசாமி, எம்எல்ஏ க.சொ.க. கண்ணன், மாவட்ட வருவாய் அலுவலா் க.ரா. மல்லிகா, அரியலூா் நகா்மன்றத் தலைவா் சாந்தி கலைவாணன், கூட்டுறவுத் துறை மண்டல இணைப் பதிவாளா் உமா மகேஸ்வரி, வருவாய் கோட்டாட்சியா்கள் அரியலூா் பிரேமி , உடையாா்பாளையம் ஷீஜா, பொது விநியோக திட்ட துணைப் பதிவாளா் சாய்நந்தினி, உடையாா்பாளையம் பேரூராட்சித் தலைவா் மலா்விழி ரஞ்சித்குமாா், அரியலூா் வட்டாட்சியா்கள் அரியலூா் முத்துலெட்சுமி, உடையாா்பாளையம் சம்பத் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.