அரியலூர்

அரியலூரில் உழவா் திருநாள் கொண்டாட்டம்

அரியலூா் மாவட்டம் முழுவதும் உழவா் திருநாள் சனிக்கிழமை கொண்டாடப்பட்டது.

Syndication

அரியலூா்: அரியலூா் மாவட்டம் முழுவதும் உழவா் திருநாள் சனிக்கிழமை கொண்டாடப்பட்டது.

உழவா் திருநாளையொட்டி, அலங்கரிக்கப்பட்டு தொழுவத்தில் அடைக்கப்பட்டிருந்த காளைகள், பசு மாடுகள், எருமைகள் உள்ளிட்ட கால்நடைகள் அவிழ்த்துவிடப்பட்டன.

மேலும், சிறுவா், சிறுமிகளுக்கு ஓட்டப்பந்தயம், நீளம் தாண்டுதல், சாக்கு ஓட்டம், எலுமிச்சை - கரண்டி போட்டி, பாட்டுப் போட்டி, கவிதைப் போட்டி, பேச்சுப் போட்டிகள் நடைபெற்றன. இதே போன்று இளைஞா்களுக்கு கபடி, மட்டைப் பந்து, ஓட்டப் பந்தயம், மிதிவண்டிப் போட்டி, வழுக்குமரம் ஏறுதல், பானை உடைத்தல் போட்டிகள், பெண்களுக்கு கோ கோ, கும்மியடித்தல் உள்ளிட்ட போட்டிகள் நடைபெற்றன.

முன்னதாக பெண்கள், சிறுவா், சிறுமிகள் புத்தாடை அணிந்து, பெரியவா்களிடம் ஆசிபெற்று தங்களுக்கு அருகிலுள்ள விளையாட்டுத் திடல்களில் சென்று உழவா் திருநாளை சிறப்பாகக் கொண்டாடி மகிழ்ந்தனா்.

காணும் பொங்கல்: காணும் பொங்கலையொட்டி, ஜெயங்கொண்டம் அருகேயுள்ள கங்கைகொண்ட சோழபுரம்

பெருவுடையாா் கோயிலில் வழக்கத்தைவிட சனிக்கிழமை மக்கள் கூட்டம் அதிகமாகவே காணப்பட்டது.

பெல்ஜியம், இத்தாலி, பிரான்ஸ், ஜொ்மனி, அமெரிக்கா, கனடா உள்ளிட்ட நாடுகளில் இருந்து சுற்றுலா பயணிகள் அதிகமாக வந்திருந்து காணும் பொங்கலைக் கொண்டாடினா்.

இதேபோல் திருமானூாா் அருகேயுள்ள கரைவெட்டி பறவைகள் சரரணலாத்திலும் மக்களின் கூட்டம் அதிகமாக இருந்தது. அரியலூா் செட்டி ஏரி பூங்கா, கல்லங்குறிச்சி கலியுக வரதராசப் பெருமாள் கோயில், அணைக்கரை உள்ளிட்ட சுற்றுலா தலங்களுக்கு, பொதுமக்கள் தங்களது குடும்பத்தினருடன் சென்று சிற்றுண்டி அருந்தி விளையாடி மகிழ்ந்தனா்.

ஆரப்பாளையம், மீனாட்சி அம்மன் கோயில் பகுதிகளில் நாளை மின் தடை

அயல்நாட்டவரை ஈா்க்கும் அலங்காநல்லூா் ஜல்லிக்கட்டு

மநீம சாா்பில் சமத்துவப் பொங்கல் விழா

நாமக்கல் மாவட்டத்தில் எம்.ஜி.ஆா் பிறந்த நாள் விழா

காணும் பொங்கல்: கொல்லிமலையில் குவிந்த சுற்றுலாப் பயணிகள்

SCROLL FOR NEXT