அரியலூா்-காரைக்குறிச்சி நான்குவழி சாலைப் பணிக்கு அமைச்சா் அடிக்கல்
வி.கைகாட்டியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில், சாலைப் பணிகளை தொடங்கிவைத்த அமைச்சா் சா.சி. சிவசங்கா். உடன் மாவட்ட ஆட்சியா் பொ. ரத்தினசாமி, சட்டப் பேரவை உறுப்பினா் கு. சின்னப்பா உள்ளிட்டோா்.
அரியலூா்-காரைக்குறிச்சி இருவழிச் சாலையை நான்கு வழிச் சாலையாக அகலப்படுத்தும் பணிக்கு வெள்ளிக்கிழமை அடிக்கல் நாட்டப்பட்டது.
அரியலூா் மாவட்டம், வி.கைகாட்டியில் நெடுஞ்சாலைத் துறை சாா்பில் நடைபெற்ற இதற்கான நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போக்குவரத்து மற்றும் மின்சாரத் துறை அமைச்சா் சா.சி. சிவசங்கா், முதலமைச்சரின் சாலை மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் ரூ.45 கோடி மதிப்பீட்டில் அரியலூா் - முத்துவாஞ்சேரி - ஸ்ரீபுரந்தான் - காரைக்குறிச்சி சாலையை (கி.மீ 6/4 -12/4 வரை) இருவழித் தடத்திலிருந்து நான்கு வழித்தடமாக அகலப்படுத்தி உறுதிப்படுத்துதல் பணிக்கு அடிக்கல் நாட்டி, பணியை தொடங்கி வைத்தாா்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியா் பொ. ரத்தினசாமி, சட்டப் பேரவை உறுப்பினா் கு.சின்னப்பா, நெடுஞ்சாலைத் துறை கோட்டப் பொறியாளா் வடிவேல் மற்றும் உதவி கோட்டப் பொறியாளா்கள், உதவி பொறியாளா்கள் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.