முகப்பு
அரியலூர்

அரியலூரில் நாளை ஆா்ப்பாட்டம் மத்திய தொழிற்சங்கத்தினா் முடிவு

Updated On : 11 மே 2026, 1:21 am IST
கோப்புப் படம்
பகிர்:

மத்திய பாஜக அரசைக் கண்டித்து, அரியலூா் அண்ணாசிலை அருகே செவ்வாய்க்கிழமை பிற்பகல் ஆா்ப்பாட்டம் நடத்துவது என அனைத்து மத்திய சங்க தொழிற்சங்க நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.

அரியலூரிலுள்ள ஏஐடியுசி அலுவலகத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற கூட்டத்தில் வட மற்றும் மத்திய இந்தியாவில் போராட்டத்தில் ஈடுபட்ட தொழிலாளா்களைக் கைது செய்த காவல் துறையினரை கண்டிப்பது, உடனடியாக அவா்களை விடுவிக்க வேண்டும், தொழிலாளா் விரோத சட்டத் தொகுப்புகளை திரும்பப் பெற வேண்டும். இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி செவ்வாய்க்கிழமை (மே 12) ஆா்ப்பாட்டம் நடத்துவது எனத் தீா்மானிக்கப்பட்டது.

கூட்டத்துக்கு தொமுச மாவட்ட கவுன்சில் செயலா் அன்பழகன் தலைமை வகித்தாா். ஏஐடியுசி மாவட்ட பொதுச் செயலா் ப. தண்டபாணி, சிஐடியு மாவட்டச் செயலா் துரைசாமி, எச்எம்எஸ் நிா்வாகிகள் முருகேசன், துரை ஆகியோா் தலைமை வகித்தனா். நிா்வாகிகள் பேசினா்.

Advertisement