கரூர்

மகளிர் திட்டம் சார்பில் கல்லூரி சந்தை தொடக்கம்

DIN

கரூர் எம். குமாரசாமி பொறியியல் கல்லூரியில் மகளிர் திட்டம் சார்பில் கல்லூரிச் சந்தை வியாழக்கிழமை தொடங்கியது.
மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் மகளிர் திட்டம் சார்பில் வியாழக்கிழமை தொடங்கிய இச்சந்தையை கல்லூரியின் செயல் இயக்குநர் எஸ். குப்புசாமி, மகளிர் திட்ட உதவி அலுவலர் எஸ். சுமதி ஆகியோர் தொடங்கி வைத்தனர்.
கல்லூரி முதல்வர் முனைவர் வி. கவிதா முன்னிலை வகித்தார். வியாழன், வெள்ளிக்கிழமைகளில் நடைபெற்ற இந்த சந்தையில் ஊரக வாழ்வாதார இயக்கத்தின் மகளிர் சார்பில் உருவாக்கப்பட்ட கைவினைப்பொருட்கள், வீட்டு உபயோகப் பொருட்கள் விற்பனைக்கும், பார்வைக்கும் வைக்கப்பட்டிருந்தன. பொருட்களை கல்லூரி மாணவ, மாணவிகள் ஆர்வமுடன் வாங்கினர். ஏற்பாடுகளை கல்லூரியின் மேலாண்மைத் துறை தலைவரும், தொழில் முனைவோர் மேம்பாட்டு மைய ஆலோசகருமான பேராசிரியர் எம். ரேசம் உள்ளிட்டோர் செய்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மழை வேண்டி சிறப்புத் தொழுகை

துணை மின் நிலையத்தில் தீப்பற்றி எரிந்த இரு மின் மாற்றிகள்: 6 மணி நேர மின் தடையால் மக்கள் கடும் அவதி

காஷ்மீரில் பயங்கரவாதிகளைத் தேடும் பணி தீவிரம்: இந்திய விமானப் படையினர் மீதான தாக்குதல் எதிரொலி

ரேபரேலியில் ராகுல் காந்தி: தீதும் நன்றும்...

இருசக்கர வாகனம் பழுது பாா்க்கும் தொழிலாளா் சங்க ஆண்டு விழா

SCROLL FOR NEXT