முகப்பு
கரூர்

ஐவர் கால்பந்து போட்டி: திண்டுக்கல் அணி முதலிடம்

கரூரில் நடைபெற்ற ஐவர் கால்பந்துப் போட்டியில் திண்டுக்கல் மாவட்ட வத்தலகுண்டு அணி முதலிடம் பிடித்து கோப்பையை தட்டிச் சென்றது. கரூர் அணிக்கு இரண்டாமிடம் கிடைத்தது.

Updated On : 30 ஜனவரி, 2024 at 12:53 PM
பகிர்:

கரூரில் நடைபெற்ற ஐவர் கால்பந்துப் போட்டியில் திண்டுக்கல் மாவட்ட வத்தலகுண்டு அணி முதலிடம் பிடித்து கோப்பையை தட்டிச் சென்றது. கரூர் அணிக்கு இரண்டாமிடம் கிடைத்தது.
கரூர் சிஎஸ்ஐ மைதானத்தில் ட்ரீம் பிக் சாக்கர் ஸ்கூல் சார்பில் மாநில அளவிலான ஐவர் கால்பந்துப் போட்டி சனிக்கிழமை துவங்கியது. போட்டியில் கரூர், திண்டுக்கல், மதுரை, தேனி, ஈரோடு உள்ளிட்ட மாவட்டங்களைச் சேர்ந்த 15 அணிகள் பங்கேற்றன. 
முதல்நாளான சனிக்கிழமை போட்டியை சிக்ஸ்த் ஸ்போர்ட்ஸ் உரிமையாளர் சந்திரமோகன், சேத்ரா இண்டர்நேஷனல் பள்ளித் தலைவர் ராஜா, கரூர் மாவட்ட கால்பந்து கழக துணைச் செயலாளர் சசிக்குமார் ஆகியோர் துவக்கி வைத்தனர். ஞாயிற்றுக்கிழமை மாலை நடைபெற்ற இறுதிப்போட்டியில் கரூர் ட்ரீம்பிக் சாக்கர் ஸ்கூல் அணியும், திண்டுக்கல் மாவட்ட வத்தலகுண்டு அணியும் மோதின. விறுவிறுப்பாக நடைபெற்ற இப்போட்டியில் கரூர் அணியை திண்டுக்கல் அணி 3-2 என்ற கோல் கணக்கில் போராடி வெற்றி பெற்றது. ஏற்பாடுகளை புவியரசன், பிரியதர்ஷன் ஆகியோர் செய்திருந்தனர். நடுவர்களாக பக்கீம், கவியரசு, மோகன், பிரபாகரன் ஆகியோர் செயல்பட்டனர். 
போட்டியில் வென்ற திண்டுக்கல் மாவட்ட வத்தலகுண்டு அணிக்கு கோப்பையும், பரிசும் வழங்கப்பட்டன.  2 ஆம் பிடித்த கரூர் அணி, 3 ஆம் இடம் பிடித்த திண்டுக்கல் லயோலா அணி, 4 ஆம் பிடித்த புலியூர் செட்டிநாடு கல்லூரி அணி ஆகிய அணிகளுக்கும் பரிசுகள் மற்றும் கோப்பைகள் வழங்கப்பட்டன.

முழு கட்டுரையைப் படிக்க →