கரூர்

புன்னம்சத்திரத்தில் குறுவட்ட செஸ்

DIN

புன்னம்சத்திரம் சேரன் உடற் கல்வியியல் கல்லூரியில் பள்ளி மாணவ, மாணவிகளுக்கான செஸ் போட்டி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
சின்னதாராபுரம் குறுவட்ட அளவிலான செஸ் போட்டியை சேரன் உடற்கல்வியியல் கல்லூரி முதல்வர் டாக்டர் அமுதா மற்றும் சேரன் கல்வியியல் கல்லூரி முதல்வர் டாக்டர் சுமதி மற்றும் சேரன் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் தேவராஜன் ஆகியோர் தொடக்கி வைத்தனர்.
போட்டியில் சின்னதாராபுரம் குறுவட்டத்திற்குட்பட்ட 62 பள்ளிகளைச் சேர்ந்த 324 மாணவ, மாணவிகள் பங்கேற்றனர். போட்டியில் வெற்றிபெற்ற மாணவ, மாணவிகள் மாவட்ட அளவிலான போட்டிக்கு தகுதி பெற்றனர். ஏற்பாடுகளை கல்லூரியின் நிர்வாக அலுவலர் வெங்கடேசன், பரமத்தி உடற்கல்வி ஆசிரியர் ஜெயபால், சேரன் மேல்நிலைப்பள்ளி உடற்கல்வி ஆசிரியர்கள் சிவராஜ், சரவணன், சீனிவாசன் மற்றும் நாகலட்சுமி ஆகியோர் செய்தனர். வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளை சேரன் கல்விக்குழுமத் தலைவர் கருப்பண்ணன், ஆலோசகர் பி. செல்வதுரை மற்றும் நிர்வாக அலுவலர் கணபதி ஆகியோர் பாராட்டினர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வேதங்கள் கற்பிக்கும் ஜனநாயகம்

ஆண்டுக்கு 15,000 குழந்தைகளுக்கு தலசீமியா பாதிப்பு!

சென்னையில் புதிய உச்சம் தொட்ட மின் நுகா்வு

வேலைவாய்ப்பக பதிவா்கள் எண்ணிக்கை 53.74 லட்சம்

அமெரிக்க தூதரகத்தை முற்றுகையிட முயற்சி: இந்திய மாணவா் சங்கத்தினா் கைது

SCROLL FOR NEXT