முகப்பு
கரூர்

குண்டர் சட்டத்தில் இளைஞர் கைது

பல்வேறு குற்ற வழக்குகளில் ஈடுபட்ட இளைஞரைப் போலீஸார் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Updated On : 22 மே, 2018 at 2:53 AM
பகிர்:

பல்வேறு குற்ற வழக்குகளில் ஈடுபட்ட இளைஞரைப் போலீஸார் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
கரூர் மாவட்டம் தோகைமலை பாளையம் ரோடு பகுதியைச் சேர்ந்தவர் சுப்ரமணியன் மகன் ரமேஷ் (27). இவர் மீது தோகைமலை உள்ளிட்ட பல்வேறு காவல் நிலையங்களில் குற்ற வழக்குகள் உள்ளன. மேலும் பல்வேறு குற்ற சம்பவங்களில் ஈடுபட்டதால் அவரை குண்டர் சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டிகே. ராஜசேகரன் ஆட்சியர் த.அன்பழகனுக்கு பரிந்துரை செய்தார். இதையடுத்து ஆட்சியர் உத்தரவின்பேரில் ரமேஷ் திங்கள்கிழமை குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டு திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.