கோதூரில் மனை பட்டா வழங்கல்
கரூர் நகராட்சிக்குட்பட்ட கோதூரில் 109 பயனாளிகளுக்கு ரூ.2.40 கோடி மதிப்பில் விலையில்லா வீட்டு மனை பட்டாக்களை போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர் விஜயபாஸ்கர் திங்கள்கிழமை வழங்கினார். கோதூரில்
கரூர் நகராட்சிக்குட்பட்ட கோதூரில் 109 பயனாளிகளுக்கு ரூ.2.40 கோடி மதிப்பில் விலையில்லா வீட்டு மனை பட்டாக்களை போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர் விஜயபாஸ்கர் திங்கள்கிழமை வழங்கினார். கோதூரில் நடைபெற்ற விழாவில் 109 பேருக்கு ரூ.2.40 கோடி மதிப்பில் விலையில்லா வீட்டுமனை பட்டாக்களை ஆட்சியர் த.அன்பழகன் தலைமையில் போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் பட்டா வழங்கிப் பேசினார். நிகழ்ச்சியில், கிருஷ்ணராயபுரம் எம்எல்ஏ கீதா மணிவண்ணன், மாவட்ட வருவாய் அலுவலர் ச.சூர்யபிரகாஷ், வருவாய் கோட்டாட்சியர் கு.சரவணமூர்த்தி, வட்டாட்சியர் கலியமூர்த்தி, நகர்நல அலுவலர் ஆனந்தக்கண்ணன் ஆகியோர் பங்கேற்றனர்.