கரூர்

கார்-வேன் மோதல்: முதியவர் சாவு, 4 பேர் காயம்

DIN

கரூர் அருகே கார் மீது வேன் மோதியதில் முதியவர் உயிரிழந்தார். மேலும் 4 பேர் காயமடைந்தனர்.
தஞ்சை மாவட்டம், திருமால்குடியைச் சேர்ந்தவர் முகமதுஆரீப்(65). இவர் தனது காரில் மனைவி மெகரூனிஷா(62),  மகன் சாகுல்அமீது(34), மகள் ரெகனாபர்வீன்(36) ஆகியோருடன் வியாழக்கிழமை இரவு கோவைக்குகாரில் சென்றார்.இந்த காரை  இவரது உறவினர் பாபநாசம் சாதிக்பாட்ஷா (44)  ஓட்டிச் சென்றார்.
இவர்கள் சென்ற கார்  கரூர்-கோவைச்சாலையில் மொச்சக்கொட்டாம்பாளையம் பகுதியில் சென்ற போது, எதிரில் கோவையிலிருந்து கரூர் நோக்கி வந்த வேன் மோதியது. இதில் நிகழ்விடத்திலேயே முகமது ஆரீப் உயிரிழந்தார். மெகரூனிஷா உள்பட 4 பேரும் பலத்த காயமடைந்து கரூர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதுகுறித்து கரூர் நகரக் காவல் நிலையத்தினர் வழக்குப்பதிந்து, திண்டுக்கல் மாவட்டம், டி. கூடலூரைச் சேர்ந்த வேன் ஓட்டுநர் ரமேஷ்குமாரைத் தேடி வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘ஒரு வார்த்தை மாறிடுச்சு..’ : கங்கனாவின் பேச்சு குழப்பமான கதை!

கர்நாடகம்: மனைவிக்காக வாக்கு சேகரித்த நடிகர் ஷிவராஜ்குமார்

காயம் காரணமாக தாயகம் திரும்பும் மதீஷா பதிரானா!

3-ஆம் கட்ட வாக்குப்பதிவு: பிரசாரம் ஓய்வு

ஆட்சிக்கு வந்தால் இஸ்லாமியர்களுக்கு 4 சதவீத இடஒதுக்கீடு: சந்திரபாபு நாயுடு உறுதி!

SCROLL FOR NEXT