கரூர்

கரூர் தொகுதிக்கு தேர்தல் பொது பார்வையாளர் நியமனம்

இந்திய தேர்தல் ஆணையத்தால் கரூர் மக்களவை தொகுதிக்கு  தேர்தல் பொது பார்வையாளராக பிரசாத்

DIN

இந்திய தேர்தல் ஆணையத்தால் கரூர் மக்களவை தொகுதிக்கு  தேர்தல் பொது பார்வையாளராக பிரசாத் குமார் நியமிக்கப்பட்டுள்ளார். இவரிடம் தேர்தல் தொடர்பான புகார்களை தெரிவிக்க விரும்பும் நபர்கள் தொடர்பு கொள்ளலாம் என தேர்தல் நடத்தும் அலுவலர் த.அன்பழகன் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
வரும் மக்களவை பொதுத் தேர்தல் 2019-ஐ முன்னிட்டு கரூர் மக்களவைத் தொகுதிக்கு இந்திய தேர்தல் ஆணையத்தால் தேர்தல் பொது பார்வையாளராக பிரசாத் குமார் நியமிக்கப்பட்டுள்ளார். மாவட்ட ஆட்சியர் வளாகத்திற்குள் அமைந்துள்ள அரசு விருந்தினர் மாளிகையில் தங்கியுள்ள அவரிடம் தேர்தல் தொடர்பான தொடர்பாக புகார் அளிக்க விரும்பும் நபர்கள் 94895-76177 என்ற அவரது அலைபேசி எண்ணிலோ, நேரிலோ  தொடர்பு கொள்ளலாம்.
தேர்தல் பொதுப்பார்வையாளரை நேரில் சந்திக்க விரும்பும் நபர்கள் மாலை 4 மணி முதல் 6 மணி வரை அரசு விருந்தினர் மாளிகையில் அறை எண்:1-ல் சந்திக்கலாம் எனத் தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

13 ஆண்டுகளுக்குப் பிறகு ஆக்‌ஷன் அல்லாத கதையில் டாம் குரூஸ்..! ஆஸ்கர் வென்ற இயக்குநருடன்!

125 புதிய மின்சாரப் பேருந்துகள் சேவையை தொடக்கிவைத்தார் உதயநிதி!

வார பலன்கள்: 12 ராசிகளுக்கும்!

மத்திய பட்ஜெட் - 2026 ஞாயிற்றுக்கிழமை தாக்கல் செய்யப்படுமா?

100 நாள் வேலைத் திட்டம் மாற்றம்: திமுக கூட்டணி மாபெரும் ஆர்ப்பாட்டம் அறிவிப்பு!

SCROLL FOR NEXT