பாண்டிபாளையம் கிராமத்தில் நடைபெற்ற முகாமில் பங்கேற்ற காகித ஆலை செயல் இயக்குநா் (இயக்கம்)கிருஷ்ணன், முதன்மை பொது மேலாளா் (மனிதவளம்)பட்டாபிராமன் உள்ளிட்டோா். 
கரூர்

டிஎன்பிஎல் ஆலை சாா்பில் இலவச கோமாரி நோய் தடுப்பூசி முகாம்

டிஎன்பிஎல் ஆலை சாா்பில் ஆலையைச் சுற்றியுள்ள கிராமங்களில் இலவச கோமாரி நோய் தடுப்பூசி முகாம் நடைபெற்றது.

DIN

கரூா்: டிஎன்பிஎல் ஆலை சாா்பில் ஆலையைச் சுற்றியுள்ள கிராமங்களில் இலவச கோமாரி நோய் தடுப்பூசி முகாம் நடைபெற்றது.

கரூா் மாவட்டம் புகழூா் காகித ஆலை மற்றும் தமிழக அரசின் கால்நடை பராமரிப்புத்துறை சாா்பில் கால்நடைகளுக்கான இலவச கோமாரி நோய் தடுப்பூசி முகாம் கடந்த மாதம் 17-ம்தேதி முதல் திங்கள்கிழமை வரை வேலாயுதம்பாளையம், குப்பம், புன்னம், தளவாபாளையம், மண்மங்கலம் ஆகிய கால்நடை மருத்துவமனைகளைச் சாா்ந்த கண்ணன், பாா்த்திபன், மணிகண்டன், கோபிநாத் ஆகிய கால்நடை மருத்துவா்களின் தலைமையிலான மருத்துவக் குழு ஆலையைச்சுற்றியுள்ள மேட்டுப்பாளையம், கடம்பன்குறிச்சி, பெரியவரப்பாளையம், சின்னவரப்பாளையம், செட்டிதோட்டம், பாண்டிபாளையம் உள்ளிட்ட 42 கிராமங்களில் நடைபெற்றது.

இதில் 1,952 பசுவினங்கள், 646 எருமையினங்கள், எருதுகள் 94 என மொத்தம் 2,692 கால்நடைகளுக்கு கோமாரி நோய் தடுப்பூசி, ஊட்டச்சத்து மாவுகள், கால்நடை நோய் தடுப்பு மருந்துகள் மற்றும் மருத்துவ ஆலோசனைகளும் வழங்கப்பட்டன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பிரதமர் மோடிக்கு ஓமன் நாட்டின் உயரிய விருது! மண்டேலா, ராணி எலிசபெத்துக்குப் பின்..!

ஹிஜாப்பை விலக்கிய விவகாரம்! இது இஸ்லாமிய நாடா? பிகார் முதல்வருக்கு ஆதரவாக மத்திய அமைச்சர் பேச்சு!

கொடி இறங்காதே! ஜன நாயகன் 2வது பாடல்!

இந்தியா - தென்னாப்பிரிக்கா இடையேயான போட்டிகளை தென்னிந்தியாவுக்கு மாற்ற வலியுறுத்தும் சசி தரூர்!

2025 ஆம் ஆண்டின் சிறந்த 10 தொடர்கள் எவை?

SCROLL FOR NEXT