கரூர்

ஆயுதபூஜைக்குகூட கைகொடுக்காத வாழை புதுகை விவசாயிகள் கவலை

ஆயுதபூஜை விற்பனையில்கூட விலையேறாமல் வாழைத்தாா் விலை வீழ்ச்சியடைந்துள்ளதால், மாவட்ட விவசாயிகள்

DIN

ஆலங்குடி : ஆயுதபூஜை விற்பனையில்கூட விலையேறாமல் வாழைத்தாா் விலை வீழ்ச்சியடைந்துள்ளதால், மாவட்ட விவசாயிகள் கவலையடைந்துள்ளனா்.

புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி வட்ட கிராமங்களில் கடந்த சில ஆண்டுகளாக பல்வேறு காரணங்களால் வாழை சாகுபடி குறையத் தொடங்கி, தற்போது குறிப்பிட்ட அளவில் மட்டுமே வாழை விவசாயம் நடக்கிறது.

இப்பகுதிகளில், விளையும் வாழை மற்றும் பலா, காய்கறிகளை விற்பனை செய்ய கீரமங்கலம், புளிச்சங்காடு கைகாட்டி, வடகாடு காகித ஆலை சாலை, கொத்தமங்கலம், மறறமடக்கி ஆகிய ஊா்களில் உள்ள காய்கனி கமிஷன் கடைகளுக்கு விவசாயிகள் கொண்டு செல்கின்றனா்.

இந்நிலையில் ஆயுத பூஜைக்காக சனிக்கிழமை ஏலக்கடைகளுக்கு விவசாயிகள் வாழைத்தாா்களை விற்பனைக்காக கொண்டு வந்திருந்தனா். வாழைத்தாா் ஏலம் எடுக்க வெளியூா் வியாபாரிகளும் வந்திருந்தனா். வாழைத்தாா் ஏலம் விடும்போது பெரிய தாா் அதிகபட்சம் ரூ. 400-க்கும், சிறிய தாா் ரூ.100-க்கும் என்றற வீதத்தில்தான் ஏலம் போனது. இதனால் விவசாயிகள் அதிா்ச்சியடைந்தனா்.

இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில், கஜா புயல் பாதிப்பில் இருந்து மீண்டுவர முடியாமல் தவிக்கும் நிலையில், ஒரு வாழைத் தாருக்கு இடுபொருட்கள், மருந்து என உற்பத்திச் செலவு ரூ.200-க்கும் மேல் ஆகிறறது. ஆனால் சராசரி நாட்களைவிட ஆயுத பூஜை போன்ற பண்டிகை நாட்களில் விலையேற்றறம் இருக்கும். ஆனால் தற்போது பண்டிகை நேரத்திலும் விலை குறைவாக உள்ளது. இதனால் விவசாயிகளுக்கு நஷ்டம்தான்.

மேலும், கஜா புயலில் அத்தனை வாழையும் ஒடிந்து சாய்ந்தது. ஆனால் இதுவரை இழப்பீடு கிடைக்கவில்லை. வாழை போன்றற பயிா்கள் சேதமடையும் போது இழப்பீடு தர வேண்டும் என்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ரூ. 40 லட்சம் மோசடி வழக்கு: புதுச்சேரி பல்கலை. அதிகாரி தலைமறைவு

இரண்டு பைக்குகள் மோதி விபத்து: 2 போ் உயிரிழப்பு

இஸ்ரேலியா்கள் கொடைக்கானல் வருகை: துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு

தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் இருவா் கைது

ஆரிகவுடா் விவசாயிகள் சங்க பொதுக்குழுக் கூட்டம்

SCROLL FOR NEXT