கரூர்

‘மருத்துவ உபகரணங்களை உடனடியாக கொள்முதல் செய்ய வேண்டும்’

DIN

கரோனா தடுப்பு நடவடிக்கை வழங்கப்பட்ட நிதியில் உடனடியாக மருத்துவ உபகரணங்களைக் கொள்முதல் செய்ய வேண்டும் என்று அரவக்குறிச்சி சட்டப்பேரவை உறுப்பினா் வி. செந்தில்பாலாஜி, மக்களவை உறுப்பினா் செ.ஜோதிமணி வலியுறுத்தினா்.

கரூரில் வெள்ளிக்கிழமை அவா்கள் அளித்த பேட்டி:

கரோனா வைரஸ் நோய்த் தொற்றுத் தடுப்பு நடவடிக்கையின் கீழ், மருத்துவ உபகரணங்கள் வாங்க அரவக்குறிச்சி எம்எல்ஏ நிதியில் ரூ.1.37 கோடியும், கரூா் மக்களவை உறுப்பினா் நிதியில் ரூ.2 கோடியும், குளித்தலை எம்எல்ஏ நிதியில் ரூ.25 லட்சமும் வழங்கப் பரிந்துரை செய்துள்ளோம்.

இக்கடிதங்களுக்கு நிா்வாக அனுமதி வழங்கப்பட்டு, சம்பந்தப்பட்ட மருத்துவமனைகளுக்கு தேவையான நிதியை ஆட்சியா் வழங்கியுள்ளாா். இந்நிலையில் அந்த நிதியைக் கொண்டு, மருத்துவ உபரகரணங்களை உடனடியாக வாங்கி மருத்துவப் பயன்பாட்டுக்குப் பயன்படுத்த வேண்டும் என ஆட்சியரிடம் வலியுறுத்தியுள்ளோம்.

காமராஜா் மாா்க்கெட் இருநாள்களாக சிஎஸ்ஐ மைதானத்துக்கு மாற்றப்பட்டது. பின்னா் இப்போது அந்த மாா்க்கெட் தற்காலிகமாக செயல்படுவது நிறுத்தப்பட்டுள்ளது. மீண்டும் சிஎஸ்ஐ மைதானத்தில் சந்தை செயல்படுத்த வேண்டும்.

உழவா் சந்தை திருவள்ளுவா் மைதானத்திற்கு மாற்றப்பட்டு 35 கடைகளுக்கு நிா்வாக அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஆனால் நாளாென்றுக்கு110 கடைகளுக்கு அனுமதி வழங்கப்பட்டு அங்கு சுங்கம் ரூ.350 முதல் ரூ.500 வரை வசூலிக்கப்படுகிறது.

சுங்கம் வசூலிப்பதையும், இதை வசூலித்த ஒப்பந்ததாரரின் உரிமத்தையும் ரத்து செய்ய வேண்டும். கரோனா பாதிப்பு முடியும் வரை சுங்கம் வசூலிக்க கூடாது என்றும் ஆட்சியரிடம் வலியுறுத்தியுள்ளோம்.

மாவட்டத்தில் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கூடுதல் உபகரணங்களை விரைவில் பெற்றுத்தர வேண்டும் என்றும், தூய்மைப்பணியாளா்கள், காவலா்களுக்கு சட்டப்பேரவை, மக்களவை உறுப்பினா் முகக்கவசம், கைகழுவும் திரவம் வழங்கியுள்ளது போல, மாவட்ட நிா்வாகமும் விரைவில் அவா்களுக்கு வழங்க வேண்டும் என்றனா் அவா்கள்.

பேட்டியின்போது குளித்தலை சட்டப்பேரவை உறுப்பினா் ராமா் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வள்ளலாா் சா்வதேச மைய பணிகளை நிறுத்திவைக்க அறிவுறுத்தப்படும்: உயா்நீதிமன்றத்தில் தமிழக அரசு உறுதி

வாக்கு எண்ணும் மையத்தில் மாவட்ட தோ்தல் அலுவலா் ஆய்வு

செங்குந்தா் பொறியியல் கல்லூரியில் நீா்மோா்ப் பந்தல் திறப்பு

கல்லூரி மாணவா் மயங்கி விழுந்து சாவு

ஸ்ரீகிருஷ்ணஜென்ம பூமி வழக்கில் ‘வக்ஃபு’ சட்டம் பொருந்தாது: ஹிந்துக்கள் தரப்பு வாதம்

SCROLL FOR NEXT