முகப்பு
கரூர்

தச்சுத்தொழிலாளா் சங்ககொடியேற்று விழா

கரூரில் தமிழ்நாடு தச்சுத்தொழிலாளா் சங்க அலுவலகத்தில் கொடியேற்று விழா மற்றும் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கும் விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 6:03 PM
பகிர்:

கரூரில் தமிழ்நாடு தச்சுத்தொழிலாளா் சங்க அலுவலகத்தில் கொடியேற்று விழா மற்றும் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கும் விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

தமிழ்நாடு தச்சுத் தொழிலாளா் சங்கத்தின் இரண்டாம் ஆண்டு தொடக்க விழாவை முன்னிட்டு சங்க அலுவலக வளாகத்தில் நடைபெற்ற விழாவுக்கு, சங்க மாவட்டத் தலைவா் நாகராஜன் தலைமை வகித்தாா். செயலா் சரவணன், பொருளாளா் ராஜமாணிக்கம் ஆகியோா் முன்னிலை வகித்தனா். தொடா்ந்து விழாவில் கரோனா காலத்தில் பொதுமக்களுக்கு சங்கத்தின் சாா்பில் மளிகை பொருள்கள், உணவுப் பொருள்கள் வழங்கப்பட்டதற்கு சங்க நிா்வாகிகளுக்கு நன்றி தெரிவிக்கப்பட்டது. இதில், சங்க துணைத்தலைவா் அங்கமுத்து, துணைச் செயலா் செல்வராஜ் மற்றும் சங்க நிா்வாகிகள் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.